தொகுதி மக்களுக்கு பரிசு மழை பொழியும் உதயநிதி ஸ்டாலின்! ஹாட் பாக்ஸ் -புத்தாடைகள் என நீளும் லிஸ்ட்!
தொகுதி மக்களை பரிசு மழையில் நனைக்கும் உதயநிதி
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு ஹாட் பாக்ஸ், புத்தாடைகள் என பரிசுப் பொருட்கள் வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.
பொங்கல் முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொடுத்து தொகுதி மக்களை குஷியாக வைத்துக் கொள்கிறார்.
சென்னையை பொறுத்தவரை துறைமுகம், சேப்பாக்கம் என இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம் தொகுதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை சென்னையில் இருக்கும் போது தனக்கு துறை ரீதியான பணிகள் இல்லாதபட்சத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் ஒரு ரவுன்ட் அடித்துவிடுவார். அதிகாரிகள், அலுவலர்கள் என அழைத்து ஒரு கூட்டத்தையும் நடத்தி விடுவார். அந்தளவுக்கு தொகுதியை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்வார் உதயநிதி ஸ்டாலின்.

பரிசுப் பொருட்கள்
இந்நிலையில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்றது. பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தொகுதியில் கட்சி சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹாட் பாக்ஸ், டிபன் பாக்ஸ், புத்தாடைகள் என பரிசுப் பொருட்களின் பட்டியல் நீள்கின்றன.

உங்களில் ஒருவன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசும் போது, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை நான் என மறக்காமல் குறிப்பிடுவார். அந்த வகையில் இன்று தனது தொகுதியில் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'என்றும் உங்களில் ஒருவராக இருந்து உழைத்திடுவேன்' என தாம் தனது தொகுதி மக்களிடம் உறுதியளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

2 தொகுதிகள்
சென்னையை பொறுத்தவரை துறைமுகம், சேப்பாக்கம் என இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் திமுக சார்பில் அதிகளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு!












Click it and Unblock the Notifications