எந்த ஊர் இளவரசர் நீங்க.. உதயநிதி பேனரை பார்த்து குமுறிய நபர்.. உதயநிதியின் பதிலை பாருங்க!
உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது கட் அவுட் கலாச்சாரம் பெரிதாகி உள்ளது. அரசியல் நிகழ்வுகள் தொடங்கி அனைத்திற்கும் கட் அவுட் வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

இரண்டு கட்சிகள்
இதில் திமுக, அதிமுக என்று வித்தியாசம் இல்லாமல் கட்சிகள் கட் அவுட் வைக்கிறது. முக்கியமாக சென்னையில் இவர்கள் கட் அவுட் வைப்பது பெரிய இடைஞ்சலாக இருந்துள்ளது. இதற்காக சில திமுக நிர்வாகிகள் கட் அவுட்டை அகற்றி வருத்தம் தெரிவிக்கும் சம்பவங்களும் நடந்து இருக்கிறது.
|
என்ன விமர்சனம்
இந்த நிலையில் டிவிட்டரில் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் உள்ள கட் அவுட் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் ''எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்.'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
|
தவறுதான்
இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் ''தவறு.. மீண்டும் நடக்காது.. 🙏🏼'' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படி
ஏற்கனேவே சில நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது இனி அப்படி நடக்காது என்று உதயநிதி மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த கட் அவுட் பிரச்சனையில் இப்படி வெளிப்படையாக பேசி இருப்பதை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications