"90000 பேர்".. வீடு வீடாக சென்று.. உரிமையாக கேட்ட உதயநிதி ஸ்டாலின்.. சேப்பாக்கம் தொகுதி புதிய சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வேக்சின் தொடர்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் பலன் கிடைத்துள்ளது.

Recommended Video

    அதிக அளவில் Vaccine போட்ட Chepauk தொகுதி.. சாதித்து காட்டிய Udhayanidhi Stalin

    தமிழ்நாட்டில் மக்கள் இடையே கொரோனா வேக்சின் போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வமாக பல்வேறு மாவட்டங்களில் காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் வேகமாக வேக்சின் போட்டு வருகிறது.

    ஆனால் வேக்சின் போட மக்கள் ஆர்வமாக இருந்தாலும் போதிய அளவு வேக்சின் தமிழ்நாடு அரசிடம் கையிருப்பில் இல்லை. மத்திய அரசு போதிய அளவு வேக்சினை வழங்காத காரணத்தால் வேக்சின் கையிருப்பு குறைந்துள்ளது.

    எப்படி

    எப்படி

    தமிழ்நாட்டில் வேக்சின் குறித்த தயக்கம் தொடக்கத்தில் மக்களுக்கு இருந்தது. வேக்சின் போட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் இடையே இருந்தது. ஆனால் போக போக மக்கள் பலருக்கு வேக்சின் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. முக்கியமாக தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் பலர் இணையத்திலும், நேரிலும் வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

    உதயநிதி

    உதயநிதி

    முக்கியமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று வேக்சின் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒவ்வொரு வீடாக சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கோரிக்கைகளை கடந்த 40 நாட்களாக உதயநிதி கேட்டு வருகிறார். தினமும் ஒரு ஏரியா என்று எல்லா ஏரியாவையும் கவர் செய்யும் வகையில் உதயநிதி களத்தில் நிற்கிறார்.

    மக்கள்

    மக்கள்

    உதயநிதி செல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு அவர் பலமுறை தொகுதியில் ரவுண்ட் அடித்துவிட்டார். ஒவ்வொரு வீட்டிற்கும் உதயநிதி செல்லும் போது, அங்கு மக்களிடம் வேக்சின் போடும்படி கேட்டுக்கொண்டார். தொடக்கத்தில் மக்களுக்கு வேக்சின் குறித்த தயக்கம் இருந்த நிலையில், உதயநிதி, நான் வேக்சின் போட்டுவிட்டேன், நன்றாக இருக்கிறேன், நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள் என்று நம்பிக்கை கொடுத்தார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    முக்கியமாக 18+ வயது கொண்ட இளைஞர்களிடம் வேக்சின் குறித்து பேசி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் வேக்சின் போட்டுக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். இப்படி தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மக்களிடம் வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாட்டில் அதிக வேக்சின் டோஸ் போட்டுகொண்டு தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி உருவெடுத்துள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு

    தமிழ்நாட்டில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 90 ஆயிரம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிக டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வேக்சின் போட முன்வந்த நிலையில், இவ்வளவு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. வீடு வீடாக உதயநிதி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், மக்கள் அங்கு ஆர்வமாக வேக்சின் போட்டுள்ளனர்.

    கோவை

    கோவை

    இது போக கோவை மாவட்டத்திலும், சென்னையின் பிற தொகுதிகளிலும் 50000+ வேக்சின்கள் பல இடங்களில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில கிராமப்புறங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் வேக்சின் விழிப்புணர்வு உள்ளது. போதிய அளவு வேக்சின் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டால் இன்னும் சில மாதங்களில் ஹெர்ட் இம்மியூனிட்டையை அடையும் அளவிற்கு வேக்சின் போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+