தாத்தா! எல்லாரும் என்னை பாராட்டுறாங்க.. நீங்க இல்லாத ஏக்கம் துரத்துகிறது.. உதயநிதி நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: சேப்பாக்கம் எம்எல்ஏவாக எனது செயல்பாடுகள் மூலம் பலரின் பாராட்டை பெற்றாலும் இதைப்பார்த்து மகிழ தனது தாத்தா இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கருணாநிதியின் பேரனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை போட்டுள்ளார்.

கருணாநிதி நினைவு தினம்
அதில் அவர் கூறுகையில் முத்தமிழறிஞரின் 3ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும் பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் என்னை துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம் பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம் என உதயநிதி தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியின் நினைவிடம்
கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள்,. மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் நுங்கம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

திருவல்லிக்கேணி எம்எல்ஏ
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் எம்எல்ஏவாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அத்தொகுதி மக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வழங்கினார், இது கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். அது போல் சேப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குடிசை பகுதிகளுக்கு உள்ளே குனிந்து ஒடுங்கி சென்று மக்களின் குறைகளை கேட்டறிகிறார்.

நடவடிக்கை
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள பொது கழிப்பறையை மாஸ்க் அணிந்து கொண்டு கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் உள்ளே சென்று ஆய்வு செய்தார், அது போல் மலை போல் தேங்கிய குப்பைகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை வைத்ததற்கிணங்க, உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
Recommended Video

கொரோனா நிவாரணம்
அதுபோல் கொரோனா நிவாரண நிதிக்காக பலரிடம் இருந்து நிறைய பங்களிப்பை பெற்றுக் கொடுத்தார். இப்படியாக இவர் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக நற்பெயரை பெற்று வருகிறார். இப்படி பலதரப்பினரும் பாராட்டும் நிலையில் இதை பார்க்க தாத்தா கருணாநிதி இல்லையே என கவலை கொண்டுள்ளார் உதயநிதி.


Click it and Unblock the Notifications
