சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வை விலக்கும் வரை திமுக ஓயாது! உதயநிதி ஸ்டாலின் மிகத் திட்டவட்டம்! மாணவர்கள் உற்சாகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    உதயநிதி ஸ்டாலின் | திமுக மாணவரணி 2 நாள் மாநாடு | Oneindia Tamil

    அனிதா செய்தது தற்கொலை அல்ல என்றும் அது கொலை எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி குறித்த 2 நாள் மாநாடு திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற உதயநிதி இதனைக் கூறினார்.

    ராஜ்யசபா தேர்தல்: இப்பவாவது நீண்டகாலம் உழைத்த எங்களுக்கு சீட் கிடைக்குமா? ஏங்கும் திமுக சீனியர்கள் ராஜ்யசபா தேர்தல்: இப்பவாவது நீண்டகாலம் உழைத்த எங்களுக்கு சீட் கிடைக்குமா? ஏங்கும் திமுக சீனியர்கள்

    நீட் தேர்வுக்கு விலக்கு

    நீட் தேர்வுக்கு விலக்கு

    மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருவது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல் எனக் கூறினார். நீட் தேர்வை திணித்ததால் தான் பன்னிரெண்டாம் வகுப்பில் 1196 மதிப்பெண்கள் பெற்றும் அரியலூர் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பு சேர முடியவில்லை என வருதப்பட்டார்.

    போராட்டம் தொடரும்

    போராட்டம் தொடரும்

    நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை தங்களுடைய முயற்சியும், போராட்டமும் ஓயாது எனவும் மிகத் திட்டவட்டமாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வால் நுழையமுடியவில்லை என்றும் அடிமை ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமியால் தான் தமிழகத்திற்குள் நீட் தேர்வு வந்ததாக உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

     எளிய மக்களின் கல்வி

    எளிய மக்களின் கல்வி

    எளிய மக்களின் கல்விக்காக என்றும் தாம் குரல் கொடுப்பேன் என உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், கல்வி உரிமைக்காக திமுக நடத்திய பல போராட்டங்களை பட்டியலிட்டு பேசினார். நமது வீட்டு பிள்ளைகள் படிக்கவே கூடாது என்பதற்காக தான் புதிய புதிய கொள்கைகளை மத்திய அரசு புகுத்தி வருவதாக சாடினார். நீட் தேர்வு வந்த பிறகு தமிழ் மீடியத்தில் படித்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

     யார் யார் பங்கேற்பு

    யார் யார் பங்கேற்பு

    கண்ணையா குமார், ஜிக்னேஷ் மேவானி, உள்ளிட்ட பலர் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட 2 நாள் மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்களும் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி விமர்சித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர்.

    English summary
    DMK will not rest until Get NEET Exam Exemption:தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X