ஹேப்பி பிரதர்ஸ்டேனு உருகிய அருள்நிதி.. கோர்த்துவிட்ட உதயநிதி.. சென்னை வந்தாலே மீட் செய்யும் துரை
சென்னை: அருள், துரை, நான் எல்லாரும் ஒன்றாகவே கோபாலபுரத்தில் வளர்ந்தோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை கருணாநிதி நீக்கினார். அதற்கு பிறகு அந்த நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய சொல்லி மனைவி தயாளு அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி சொல்லியும் கருணாநிதி கடைசி வரை கேட்கவே இல்லை.

தம்பி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்த்துதான் அழகிரி தனது தந்தையிடம் குரல் கொடுத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனால் அண்ணன் தம்பி இடையே பேச்சுவார்த்தை இல்லை என்றும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக அழகிரி அவ்வப்போது சில கருத்துகளை தெரிவித்து வந்தார். மேலும் ரஜினி தொடங்கும் கட்சியில் அழகிரி சேருவார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அழகிரி வாழ்த்துகளை ஸ்டாலினுக்கு தெரிவித்தார். மேலும் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக துரை அழகிரியையும் மகள் கயல்விழியையும் அனுப்பி வைத்திருந்தார். அப்போது அந்த விழாவில் உதயாவும் துரையும் கட்டி அணைத்த புகைப்படம் அப்போது வைரலானது. இதையடுத்து முதல்வர் எப்போது மதுரை சென்றாலும் அழகிரியை பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் உதயநிதி விளையாட்டுதுறை அமைச்சராக பதவியேற்ற போது மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க சென்ற போது பெரியப்பா ,பெரியம்மாவை சந்தித்தார். உதயநிதிக்காக வெளியே காத்திருந்து அழகிரி அழைத்துச் சென்றார். பெரியம்மா காந்திமதி உச்சி முகர்ந்து தனது கொழுந்தன் மகனை வாழ்த்தினார்.
இதன் பிறகாவது அண்ணனும் தம்பியும் சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் சகோதரர்கள் தினத்தின் போது துரை, உதயநிதி, அருள்நிதி ஆகியோர் ஒன்றாக இருந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த அருள், சகோதர தின வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தயாளு அம்மாளின் 90ஆவது பிறந்தநாள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்போது ஆழ்வார்பேட்டையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்திற்கு சென்றார். அது போல் அவர் சென்ற சில நிமிடங்களில் மு.க.அழகிரியும் மனைவியுடன் வந்திருந்தார். இந்த விழாவில் முதல்வரும் அழகிரியும் பேசிக் கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் முதல்வரும் பெரியப்பாவும் சந்தித்து பேசிக் கொண்டனர். அவர்களுக்கு எப்போது சண்டை வந்தது. இப்போது பேசுவதற்கு என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவில் அழகிரி இணைவாரா என்ற கேள்விக்கு அவர் தெரியாது என பதிலளித்தார். அதே விழாவில் அடுத்த தலைமுறையினரான துரை அழகிரி, உதயநிதி, அருள் நிதி ஆகியோர் சிரித்து அரட்டை அடித்த காட்சிகளும் வைரலானது.

இந்த நிலையில் உதயநிதி மாரி செல்வராஜுடன் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான், துரை அண்ணன், அருள் எல்லாரும் கோபாலபுரத்தில் ஒன்றாகவே வளர்ந்தோம். துரை அண்ணன் மதுரை போய்விட்டார். ஆனால் சென்னை வந்தால் நாங்கள் எல்லாம் ஒன்றாக மீட் செய்வோம்.
இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் ஹீரோ லுங்கி கட்ட வேண்டும், மாட்டை குளிப்பாட்ட வேண்டும், மாடுடன் ஓட வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதற்கெல்லாம் நான் சரிப்பட மாட்டேன் சார், என்னிடம் என் தம்பி அருள்நிதி இருக்கிறான். அவன் இதற்கெல்லாம் செட் ஆவான், என கூறி அருளை நடிக்க வைத்தேன். அந்த படம் ஹிட்டானது. அருளும் நன்றாக நடித்திருந்தார் என்றார். ஜாலி, காமெடி டைப் படங்கள் என்றால் உதயநிதி நடிப்பாராம். மாட்டை குளிப்பாட்டும் படம் என்றால் அருள்நிதியை கைகாட்டுவாராம்! என்னங்க இதெல்லாம்!
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications