சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், "ஷோபா மாடல் அரசு அமைந்தது முதல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாத நாளே இல்லை. நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்" என்று முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மேலும் கூறிய அவர், சிங்கப்பெண் படை தொடக்க நிகழ்ச்சியை தள்ளி வைச்சுருக்கீங்களா, இல்லை முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களா?.. சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு. பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications