Inbanidhi: முதல் முறையாக ஓட்டு போட்ட துணை முதல்வர் மகன் இன்பநிதி.. செய்தியாளர்கள் கேள்விக்கு கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி இந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்கள், அவரிடம் முதல் முறை வாக்களித்த அனுபவம் எப்படி உள்ளது என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த இன்பநிதி, "ரொம்ப சந்தோஷமாக உள்ளது" என்று கூறினார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி மற்றும் மருகமள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்ப நிதி ஆகியோரும் வந்து வாக்களித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அபோது அவர் கூறியதாவது:- "அனைவரும் தயவு செய்து ஓட்டு போடுங்கள் உங்களின் கடமை.. வாக்களியுங்கள்" என்றார்.
தொடர்ந்து இன்பநிதியிடம் செய்தியாளர்கள் முதல் முறையாக வாக்களித்து உள்ளீர்கள் எப்படி பார்க்குறீங்க என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த இன்பநிதி, ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் செல்போனை வாக்குச்சாவடி மையங்களுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. செல்போன்களை வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்து செல்ல பிரத்யேக இட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications