அட்டகாசம்! சுய உதவிக்குழுக்களுக்கு குட் நியூஸ்.. உள்ளே வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெண்களுக்கு இனி பணமழை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அன்று ஆய்வு மேற்கொண்டார்.
புதிய நிகழ்ச்சி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ். திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 14.08.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு. நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், என்று கூறப்பட்டு உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications