அப்போ கன்பார்மா? உதயநிதிக்கு போன "அசைன்மென்ட்".. உலக அளவில் கவனிப்பாங்களாம்.. பரபரக்கும் அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்பது கிட்டத்தட்ட புலி வருது கதையாக கடந்த ஒரு வருடமாக பேசப்பட்டு வருகிறது. மே 7ம் தேதி வந்தால் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிடும்.. இதுவரை உதயநிதி அமைச்சராக ஆகவில்லை.

ஆனால் கடந்த சில நாட்களாக இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் உதயநிதியை அமைச்சரவையில் சேர்ப்பது பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமை முக்கியமான ஒரு அசைன்மென்ட்டை கொடுத்து இருப்பதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அந்த அசைன்மென்ட்டை வைத்தே அவருக்கு அமைச்சரவையில் இடமும் கிடைக்க போகிறதாம்.

அமைச்சரவை

அமைச்சரவை

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தொடர்பாக ஏகப்பட்ட தகவல்கள் கடந்த சில நாட்களில் வெளியாகின. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படலாம். இப்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க சொல்லி இருக்கின்றனர். இது அமைச்சரவையில் அவரை இணைப்பதற்கான ஏற்பாடுதான் என்றும் கூறப்பட்டது.

ஏகப்பட்ட தகவல்கள்

ஏகப்பட்ட தகவல்கள்

இது போக உதயநிதி ஸ்டாலின் காரில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, விரைவில் அதில் இலச்சினை பொறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. அதாவது அமைச்சர் பதவிக்கான இலச்சினை விரைவில் அதில் பொறுத்தப்படலாம். அதனால்தான் காரில் இந்த மாற்றங்கள் செய்யபட்டது என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம் அவரை அமைச்சராக போகும் உத்தேச தேதிகள் கூட அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

குழப்பமான டேட்

குழப்பமான டேட்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற மே 7ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகலாம் என்று ஒரு பக்கம் தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டது. இந்த தேதியில் இன்னும் பல குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் செப்டம்பருக்குள் இவர் அமைச்சர் ஆவது உறுதி என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன செய்வார்?

என்ன செய்வார்?

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமை முக்கியமான ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருப்பதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சென்னையில் மாமல்லபுரத்தில் ரூ.100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. உலக நாடுகள் கவனிக்க போகும் போட்டி இது என்பதால் தமிழ்நாடு அரசு இதற்கு பிரம்மாண்ட தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளதாம்.

அசைன்மென்ட்

அசைன்மென்ட்

தமிழ்நாட்டை பறைசாற்றும் வகையில் மிகப்பெரிய தொடக்க விழா ஒன்றை நடத்த போகிறார்களாம். இதற்கு தேசிய தலைவர்களும், பல முக்கிய புள்ளிகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்தான் நடக்க உள்ளது. இதை நடத்துவதற்கான அசைன்மென்ட் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான அசைன்மென்ட் இவருக்கு கொடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என்கிறார்கள்.

 விளையாட்டுத்துறை

விளையாட்டுத்துறை

அதன்படி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம். அந்த துறையில் அமைச்சராக இருக்கும் எஸ் மெய்யனாதனுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மட்டும் இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன. அதை முன்னிட்டே உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த சேப்பாக்கம் விழா ஏற்பாடுகளை செய்யும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நெருக்கம்

நெருக்கம்

உதயநிதியும் கடந்த சில நாட்களாக மெய்யனாதன் உடன் நெருக்கமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் ஸ்பெயின் செல்ல உள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்கு உதயநிதி கால்பந்துகளையும், உதவி தொகையையும் வழங்கினார். இது எல்லாம் அவர் விளையாட்டு துறையை கையில் எடுக்க போவதற்கான டீசர் என்றுதான் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பவர் புல் அமைச்சரவை இல்லை என்றாலும்.. இளைஞர்களுடன் நெருக்கமாக இருக்கலாம் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+