சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தட்டி தூக்கிய உதயநிதி.. 2022ல் சிறப்பாக செயல்பட்ட இளம் அரசியல்வாதி யார்? கருத்து கணிப்பில் ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: 2022ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இளம் தலைமுறை அரசியல்வாதி யார்? என்று ஒன்இந்தியா தமிழ் சார்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பிற்கு மக்கள் சுவாரசியமான பதில் அளித்துள்ளனர்.

ஒன்றரை வருடங்கள்.. சரியாக 19 மாதங்கள் கழித்து தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அமைச்சர்களின் செயல்பாடுகள் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

இனிமே பணம் கேட்டா அவ்வளவு தான்! ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை! விடுதியில் மாண்ட மாணவன்! இனிமே பணம் கேட்டா அவ்வளவு தான்! ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை! விடுதியில் மாண்ட மாணவன்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது போலவே பல இளம் தலைமுறை அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் கவனம் பெற தொடங்கி உள்ளனர். பல்வேறு கட்சிகளில் இரண்டாம் இடத்தில் இருந்த தலைவர்கள் கட்சியின் நிர்வாகத்தை கடந்த 2 வருடங்களில் கையில் எடுத்துள்ளனர். உதாரணமாக பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் இளைஞரணி செயலாளராக இருந்தார். ஆனால் அவர் பாமகவின் தலைவராக தேர்வாகி கட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

அமைச்சர்

அமைச்சர்

அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வாகி ஒரு வருடம் ஆகி உள்ளது. தமிழ்நாடு பாஜக உட்கட்சி நிலவரங்களை, முடிவுகளை அண்ணாமலைதான் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் 2022ம் வருடம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட இளம் அரசியல் தலைவர் யார் என்று மக்களிடம் ஒன் இந்தியா ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து சர்வே எடுக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, சீமான் ஆகியோரின் பெயர்கள் ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டு இருந்தன. ட்விட்டர் ஓபனான பிளாட்பாரம், எத்தனை ஓட்டு யாருக்கு போயுள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். மேலும், நேற்று காலை முதல் இன்று காலை வரை என 24 மணி நேரத்திற்கு இந்த சர்வே நடத்தப்பட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

இதில் மொத்தமாக சுமார் 40 ஆயிரம் பேர் ஓட்டு போட்டனர். அதில் உதயநிதி முதலிடம் பிடித்து இருக்கிறார். 38 சதவிகிதம் பேரின் வாக்குகளை பெற்று உதயநிதி ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இதில் முதலிடத்திற்கு நேற்று முதல் கடும் போட்டி இருந்தது. அண்ணாமலை, உதயநிதி என மாறி மாறி வந்தனர். ஆனால் கடைசியில் அதிக வாக்குகளை பெற்று உதயநிதி வெற்றி பெற்றார். அண்ணாமலை 32.6% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

சீமானை

சீமானை

இது போக நாம் தமிழர் சீமான் 21.3% வாக்குகளை பெற்றுள்ளார். பாமக தலைவர் அன்புமணி கடைசி இடத்தை பிடித்து உள்ளார். இவர் வெறும் 8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இளம் அரசியல் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றார். தற்போது உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை, இளைஞர் நலன் பிரிவு அமைச்சராக இருந்தால், அவரால் இளைஞருடன் நேரடியாக கலந்துரையாட முடியும் என்று திமுக நினைக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் இடையே உதயநிதி ஸ்டாலின் அடுத்த கட்ட தலைவராக கவனம் பெறுவார் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்கள்

இளைஞர்கள்

உதயநிதியை இளைஞர்கள் இடையே கொண்டு செல்ல இந்த துறை உதவும் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கின்றது. தமிழ்நாட்டில் பாஜகவும் இதே ரூட்டை எடுத்துள்ளது. சமீபத்தில் மோடி கபடி போட்டிகளை உள்ளூர் அளவில் நடத்தியது. பாஜகவை பிரபலமாக்கும் வகையில் பாஜக இந்த போட்டிகளை நடத்தியது. உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராகும் பட்சத்தில் அரசு சார்பாக பெரிய அளவில் பல உள்ளூர் விளையாட்டுகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் 2022ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இளம் தலைமுறை அரசியல்வாதி என்ற பெயரை பெற்றுள்ளார்.

English summary
Sports Minister Udhayanidhi Stalin wins as the best young politician of the year 2022 poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X