“ரீல்ஸ் எல்லாம் வாழ்க்கை இல்லை.. ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி தான்”.. உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை, ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி மட்டும் தான் என பள்ளி மாணவ மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காரைக்குடி அழகப்பா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மாநிலம் முழுவதும் 5,34,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.241 கோடி மதிப்பிலான சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பெண்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்ட காலத்திலிருந்து, தற்போது அதிகளவில் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படிப்பது திராவிட இயக்கத்தின் நூறாண்டு போராட்டத்தின் வெற்றி. கல்வி, ஏழ்மையைப் போக்கும் மிகப்பெரிய ஆயுதம். கல்வி, பணம் மட்டுமல்ல, நம்பிக்கையும் ஆற்றலும் அளிக்கும்.
ஒரு குடும்பத்தின் ஏழ்மையை நீக்கக்கூடிய ஒரே சக்தி கல்வி தான். அதனால் தான் தமிழக முதலமைச்சர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே அதிக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி வலியுறுத்தியபடி மாணவர்கள் 'ஏன்? எதற்கு? எப்படி?' என்று தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும்.
மேலும், மாநிலம் முழுவதும் 22 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் 1,000 ரூபாய் பெறுகின்றனர்.விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் அறிமுகமாகிறது. தொடர்ந்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை. அதில் வருவது பெரும்பாலும் பொய்யான உலகம். ரியலான வாழ்க்கையில் உதவுவது கல்வி தான். மாணவர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடாமல் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
ஆசிரியர்கள் உடற்கல்வி நேரத்தை குறைத்து பிற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் கூடுதல் நேரம் வழங்கி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல் ஆரோக்கியமும் அதே அளவுக்கு அவசியம். கல்வியில் முன்னேறும் மாணவர்கள் குடும்பத்தையும், தமிழகத்தையும் முன்னேற்றுவார்கள்" எனப் பேசியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications