சாத்தான்குளம் போலீசார் மீது கொலைவழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டும்: உதயநிதி
சென்னை: சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'தரையில் விழுந்து புரண்டனர், இருவரையும் ஒன்றாக அழைத்துச்சென்றோம்' என்பதாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வரிக்கு வரி பொய்யாக ஜோடித்து எழுதப்பட்டது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இருவரின் கொலைக்கு காரணமான போலீசார், அவர்களுக்கு துணைபோனவர்கள் யார்யார் என்பதைத்தவிர இதில் விசாரிக்க பெரிதாக ஏதுமில்லை. 'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பதை மனதில்கொண்டு போலீசார் மீது கொலைவழக்கு பதிந்து விசாரணையை தொடங்கவேண்டுமாய் @CMOTamilNadu அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications