மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை முடியும் செய்யும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதமாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக யார் நின்றாலும் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் சார்பாக விசாரித்த போது, உதயநிதி ஸ்டாலின் இம்முறை திருவாரூர் தொகுதிக்கு மாறப்போவதாக தெரிய வந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நாளை திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடக்கவுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் சொன்ன பின் தொடங்குவோம். தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியாக மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். அதனால் தனியாக பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. திமுக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. சொல்லாத பலவற்றையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
காலை உணவுத் திட்டம் தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத ஒன்று. அதேபோல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், ட்டசபைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை முடியும் செய்யும். நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினின் பதில் விவாதமாகி இருக்கிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications