போன் வந்ததும்.. பதறிப்போய் ஓடி வந்த உதயநிதி.. 36 குழந்தைகள் காப்பாற்றப்பட்டது எப்படி? பரபர பின்னணி
சென்னை: நேற்று திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து என்ற தகவல் வந்ததும், முதல் ஆளாக அத்தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி வேகமாக சம்பவ இடத்திற்கு வந்து இருக்கிறார். மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழிகாட்டும் வகையில் உதயநிதி முதல் ஆளாக சம்பவ இடத்திற்கு வந்தார்.
Recommended Video
திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை தமிழகத்தில் பெரிய குழந்தைகள் மருத்துவமனைகளில் ஒன்று. பல வருடங்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த மருத்துவமனைக்கு தினமும் 1000-2000 நோயாளிகள், மக்கள் வருவது உண்டு.
குழந்தைகள், பிரசவம், பொது மருத்துவமனையாக இது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பிரபலமான இந்த மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

எங்கு
இரண்டாம் தளத்தில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் இன்குபேட்டர் அறையில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 30 குழந்தைகள் இருந்தனர். ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்கசிவு ஏற்பட்டு ஏசி தீ பற்றியுள்ளது. பின் அந்த தீ வேகமாக சுவர்களில் பரவியது. இதனால் புகை லேசாக பரவ தொடங்கியது.

போன்
இங்கு தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதேபோல் அங்கிருந்த சில அதிகாரிகள் மூலம் உடனடியாக திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் என்ன நடக்குமோ என்று பதறிப்போன உதயநிதி வேகமாக சம்பவ இடத்திற்கு வந்தார்.

நலப்பணி
நேற்று உதயநிதி நாள் முழுக்க சேப்பாக்கத்தில் உள்ள பகுதிகளில்தான் கொரோனா தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் செய்து கொண்டு இருந்தார். மாலை பணிகளை முடித்து திரும்பிக்கொண்டு இருந்த அவருக்கு போன் வந்ததும் சில நிமிடங்களில் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். சில நிமிடங்களில் அங்கு தீயணைப்பு படையினரும் வந்தனர்.

புகை
அதே சமயம் குழந்தைகள் இருந்த அந்த அறையில் புகை பரவினால், பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் துரிதமாக செயல்பட்ட நர்ஸ்கள் உடனடியாக 30 குழந்தைகளையும் அங்கிருந்து காப்பாற்றி கீழே கொண்டு வந்தனர். இதில் இன்குபேட்டரில் இருந்த இரண்டு குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இல்லை
இந்த சம்பவம் நடந்த தகவல் கேட்டதும் உதயநிதி அங்கே வந்தார். அதன்பின் அமைச்சர் சேகர் பாபுவும் சம்பவ இடத்திற்கு வந்தார். இரண்டு பேரும் ஒரு செய்தி கேட்டதும் சம்பவ இடத்திற்கு வந்தது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்று அதிகாரிகளிடம் அதன்பின் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

சந்தித்தார்
அதன்பின் அங்கிருந்த குழந்தைகளை சந்தித்தார். அவர்களின் பெற்றோரிடம் ஆறுதலாக பேசி, சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடு செய்வதாக உதயநிதி உறுதி அளித்தார். நேற்று அதிகாரிகள், மருத்துவமனைகள் ஊழியர்கள், எம்எல்ஏக்கள் என்று எல்லோரும் துரிதமாக செயல்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications