அங்கு இருந்ததா? சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை? வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்!
சைக்கோ படத்தில் எந்த காட்சியிலும் ஏன் சிசிடிவி கேமரா இல்லை என்பது தொடர்பாக பரவி வரும் வைரஸ் வாட்ஸ் ஆப் பார்வேர்ட் மெசேஜ் ஒன்றை நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
சென்னை: சைக்கோ படத்தில் எந்த காட்சியிலும் ஏன் சிசிடிவி கேமரா இல்லை என்பது தொடர்பாக பரவி வரும் வைரஸ் வாட்ஸ் ஆப் பார்வேர்ட் மெசேஜ் ஒன்றை நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த டிவிட் வைரலாகி உள்ளது.
சைகோ படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கி இந்த படம் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட் தரத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கோ கில்லர் கதை அம்சத்தை கொண்ட இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

என்ன எழுதுகிறார்கள்
இந்த படம் நிறைய நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சைக்கோ அன்பை போதிக்கிறது. நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் அன்புதான் தீர்வு. அன்பை வைத்து உலகை வெல்லலாம் என்று இந்த படம் எடுத்துரைக்கிறது. இதனால் இந்த படத்தை பார்த்த பலர் அது தொடர்பாக நல்ல விமர்சனங்களை இணையத்தில் எழுதி வருகிறார்கள்.

கலவையான விமர்சனம்
அதேபோல் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு கலவையான விமர்சனமும் வந்துள்ளது. ஹாலிவுட் படத்தின் தழுவல் போல இருக்கிறது. தேவையில்லாத, நம்ப முடியாத காட்சிகள் உள்ளது என்று புகார்கள் உள்ளது. ஒரு கண் தெரியாத நபர், சீரியல் கில்லரை கண்டுபிடிப்பது நம்பும் படி இல்லை. மிஷ்கின் அஞ்சாதே போலவே ஒரு படம் எடுக்க வேண்டும். ஆனால் உதயநிதி நடிப்பு சூப்பர் என்று கூறி வருகிறார்கள்.

என்ன வைரல்
இந்த நிலையில் சைக்கோ படம் குறித்து வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது. அதை உதயநிதி ஸ்டாலினும் பகிர்ந்துள்ளார். அதில் சைக்கோ படத்தில் ஏன் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கிறார்கள். அந்த படம் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அதனால் அப்போது எங்குமே சிசிடிவி கேமரா இல்லை. இதனால் படத்திலும் கேமரா இல்லை.
|
செம பதில்
முதலில் அவர்களை சிசிடிவி வீடியோவை காட்ட சொல்லுங்க. அவங்களிடம் வீடியோ இருந்தால் காட்டட்டும். அப்பறம் நாங்க காட்டுகிறோம். ஆறுமுக சாமி கமிஷன் மாதிரி நை நைன்னு கேள்வி கேட்டுகிட்டு, என்று அந்த வாட்ஸ் ஆப் மெசேஜில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் உதயநிதி ஸ்டாலின் ஷேர் செய்து, இது நல்ல வாட்ஸ் ஆப் மெசேஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications