மக்கள் பலியான சோகமான நேரத்தில்.. விஜய்க்கு ஆதரவாக.. களமிறங்கிய வடஇந்திய பிஆர்.. அருவெறுப்பு!
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட நடிகர் விஜயின் சாலை பயணத்தில் மக்கள் கொத்து கொத்தாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் விஜயின் பிம்பம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக பிஆர் கும்பல் களமிறக்கப்பட்டு உள்ளது.
விஜய்க்கு ஆதரவாக பெரிய பிஆர் படம் களமிறங்கி உள்ளது. We stand with Vijay என்று சொல்லிவைத்தார் போல இவர்கள் போஸ்ட் போட்டு வருகிறார்கள். விஜயை பற்றி இதற்கு முன் பேசாத பல PR BOT ஐடிக்கள், முக்கியமாக தமிழக ஆசியால் பற்றியே பேசாத பல PR BOT ஐடிக்கள் இப்போது விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம் என்று பேச தொடங்கி உள்ளன.
மக்கள் பலியான சோகமான நேரத்தில்.. விஜய்க்கு ஆதரவாக.. களமிறங்கிய வடஇந்திய பிஆர் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விஜய்க்காக அரசியல் திட்டங்களை வகுக்கும் குழு இது போன்ற மோசமான, அருவெறுப்பான செயலை செய்திருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் பலியான ரத்தத்தின் ஈரம் கூட காயவில்லை.. அதற்குள் உங்களுக்கு PR அரசியல் கேட்கிறதா என்று கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

உயரும் பலி எண்ணிக்கை
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்
இது தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்., என்று கூறி உள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications