பிரச்சனைக்கு காரணமே இதுதான்! உக்ரைன் - ரஷ்ய போரில் மூக்கை நுழைத்த கிம் ஜோங்! வடகொரியா தரும் ட்விஸ்ட்
சென்னை: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் முதல்முறையாக வடகொரியா கருத்து தெரிவித்துள்ளது.
Recommended Video
ரஷ்யா -- உக்ரைன் போர் மேகங்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக சூழ்ந்து வந்த நிலையில் தற்போது அங்கு தீவிர போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ படையுடனும், அமெரிக்காவுடனும் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது.
ஒரு காலத்தில் ஒரே நாடாக சோவியத் கீழே இருந்த இரண்டும் தற்போது மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கின்றன. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

வடகொரியா
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போரில் முதல்முறையாக கிம் ஜோங் உன்னின் வடகொரியா மூக்கை நுழைத்து இருக்கிறது. முதல்முறையாக வடகொரியா இதில் தெரிவித்துள்ள அதிகாரபூர்வ கருத்தில் உக்ரைன் போருக்கு காரணமே அமெரிக்காதான். இந்த போருக்கான ஆணி வேர் அமெரிக்காதான். ராணுவ ரீதியாக ரஷ்யா தனது பாதுகாப்பை உறுதி செய்ய முயன்று வருகிறது. ரஷ்யாவின் செயல்பாடு அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நடக்கிறது.

போர் காரணம்
இந்த போருக்கான காரணம் எல்லாம் அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுதான் இந்த போருக்கு காரணமே. அமைதி, பாதுகாப்பு என்று கூறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது. ஆனால் மற்ற நாடுகள் இதற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதை அமெரிக்கா போன்ற நாடுகள் விமர்சனம் செய்கின்றன.

உலகின் பெரிய சக்தி
அமெரிக்கன் இந்த நிலைபாட்டை ஏற்க முடியாது. அமெரிக்கா உலகின் பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அமெரிக்காவிற்கு தனது கைகளில் பவர் இருக்க வேண்டும். அதற்காக அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று வடகொரியா கூறியுள்ளது. வடகொரியா கம்யூனிச நாடு ஆகும். இது ரஷ்யா மற்றும் சீனாவிற்கு நெருக்கமான நாடு ஆகும்.

மோதல்
முக்கியமாக அமெரிக்கா - வடகொரியா இடையே கடுமையான மோதல் கடந்த பல வருடமாக நிலவி வருகிறது. கொரிய போரில் இருந்தே அமெரிக்கா - வடகொரியா இடையே மோதல் உள்ளது. இப்போது உக்ரைன் போரிலும் வடகொரியா அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி உள்ளது. வடகொரியாவும் சீனாவும் நெருக்கமான நாடுகள் ஆகும். வடகொரியா உலகில் அணு ஆயுதம் கொண்ட நாடுகளில் முக்கியமான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications