உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி கட்டணம் வரும் செப்.1 முதல் உயர்வு.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடியில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட உள்ளது.
செங்குறிச்சி டோல்கேட்டில் கார், ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படவுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.115 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 6,606 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மீதமுள்ள 1,472 கி.மீ. சாலைகளை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலை துறையும் பராமரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, டோல்கேட்டுகள் இயங்கி வருகின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் டோல்கேட் கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதல் பாடாலூர் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
செங்குறிச்சி டோல்கேட்டில் கார், ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படவுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.115 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் தான் இந்த டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வர இருக்கிறது. இதனால் அந்த டோல்கேட்டுகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இதனால் டோல்கேட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications