தமிழ்நாட்டில் டிஜிட்டல் புரட்சி.. பழனிவேல் தியாகராஜனை மனதார பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் சர்வதேச 'உமேஜின் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது.

Umagine 2024: Digital revolution in Tamil Nadu.. Chief Minister Stalin heartily praised Palanivel Thiagarajan

உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஏன் தகவல் தொழிநுட்ப துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். நிதித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்தது போலவே தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்.

தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தலைமுறை தலைமுறையாக நாட்டிற்கு தொண்டாற்றி வரும் குடும்பத்திற்கு தொண்டாற்றி வரும் குடும்பத்திற்கு சொந்தக்காரர் அவர்.

வெளிநாட்டிற்கு சென்ற பின்னரும் தமிழ்நாட்டை மறக்காதவர். தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்த பிறகும் தொழில் வியாபாரம் என்று செல்லாமல் தாத்தா, அப்பா வழியில் அரசியல் பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டிக்கிறார்.

நான் அவரை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு மாற்றியதற்குக் காரணம் மாற்றத்திற்காகத்தான். அவரது தலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை வாய்ப்பு அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாகும். அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

வருங்காலம் என்பது கணினியின் காலம் என்று கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்தவர் கருணாநிதி. கணினி வாசலை தமிழ்நாட்டில் திறந்து வைத்தவர். தமிழ்நாடு தற்போது முதன்மையான மாநிலமாக உள்ளது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்‌ என்று நாங்கள் அவரை அழைப்போம். காரணம் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் டைடல் பார்க் திறக்கப்பட்டது.

ஐடியின் பொற்காலமாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+