Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பட்டமான பழிவாங்கல்.. “தி மோடி குவெஸ்டீன்” ஆவணப்படத்தால் பிபிசியில் புகுந்த ஐடி -யுஎம்பிசி கண்டனம்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சர்வே நடத்தப்படுவதற்கு மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஜராத் கலவரத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் நிலையில் இன்று பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சார்பில் சர்வே நடத்தப்படுவதற்கு மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பலர் மாயமானதுடன், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்த மத வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரிட்டன் அரசு விசாரணை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

ஆவணப்படத்துக்கு தடை

ஆவணப்படத்துக்கு தடை

"இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் வெளியான அந்த ஆவணப்படத்தில், பிரதமர் மோடியின் பங்கு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது பலரை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து 2 பாகமாக வெளியான இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.

தடையை மீறி திரையிடல்

தடையை மீறி திரையிடல்

இதன் காரணமாக யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்படவில்லை. அந்த ஆவணப்படத்திற்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்படாத காரணத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு அதை பார்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கல்லூரிகளில் போராட்டம்

கல்லூரிகளில் போராட்டம்

அதேபோல் பிபிசியின் இந்த ஆவணப்படம் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜ் செய்யும் செயலிகளின் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்கள் நடந்தன.

 தமிழ்நாட்டில் போராட்டம்

தமிழ்நாட்டில் போராட்டம்

அதேபோல் சென்னையில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சென்னை பெண் கவுன்சிலர் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் அமைப்பு இந்த ஆவணப்படத்தை திரையிட்டது. அதேபோல் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் வெளியிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை

இந்த நிலையில் இன்று காலை டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அமைந்து இருக்கும் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சர்வேயில் ஈடுபட்டு வருகிறார்கள். பிபிசி அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை திகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம்

மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம்

இந்த வருமான வரித்துறை சர்வேவுக்கு மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அந்த அமைப்பு இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பிபிசி 2, 'இந்தியா: தி மோடி ஆவணப்படத்தை வெளிட்டதை தொடர்ந்து அதற்கு தடை விதித்ததுடன் இன்று இந்தியாவில் உள்ள பிபிசி வேர்ல்டு, பிபிசி தமிழ் அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சர்வே, அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். கடும் கண்டனங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+