மொத்தமாக எல்லாம் மாறிவிட்டது.. ரயில் ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்.. வந்தது புதிய ரூல்ஸ்
சென்னை: ரயிலில் அன் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் ஜெனரல் டிக்கெட்டுகளுக்கான விதிகளையும் ரயில்வே மாற்றி உள்ளது.
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது.அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.

உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன. இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
ஆனால் புக்கிங் செய்யாமல் ரயிலில் செல்லும் போது இது போன்ற சுகத்தை அனுபவிக்க முடியாது. முக்கியமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வது என்பது ரயிலில் மிக மிக கொடுமையானது. கூட்டம் நேரம் இல்லாத சமயங்களில் பிரச்சனை இல்லை.
ஆனால் அதிக கூட்டம் உள்ள போது ரிசர்வ் செய்யாமல் ரயிலில் செல்வது என்பது கொடுமையானது. இந்தியாவில் ஒரு பக்கம் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. வந்தே பாரத் உலக தரத்துடன் இருக்கின்றன. சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயிலில் ஏகப்பட்ட நவீன வசதிகள் உள்ளன. ரயில்களின் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்னமும் வசதிகள் எதுவும் இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. அதிலும் ரிசர்வ் இல்லாத கோச்சுகள் மிக மோசமாக காட்சி அளிக்கின்றன. மக்கள் மூச்சை பிடித்துக்கொண்டு, முண்டி அடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மாற்றம்: இந்த நிலையில்தான் இந்தியாவில் இருக்கும் ரயில்களில் உள்ள அன் ரிசர்வ் பெட்டிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் பெட்டிகளை நவீனமாக்கவும், உள்ளே இருக்கைகளை நவீனமாக்கவும், இருக்கைகளை சுத்தமாக வைத்து இருக்கவும் ஆலோசனைகளை செய்து வருகிறது.
அதேபோல் கழிப்பறைகளை சுத்தமாக வைத்து இருக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக ரிசர்வ் இல்லாத கோச்சுகளை அடியோடு மாற்றி அதற்கு புதிய லுக் கொடுக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தண்ணீர் வசதி தொடங்கி ஆட்டோமெட்டிக் கதவுகள், புதிய மின் விசிறிகள், விளக்குகள் உடன் இந்த புதிய வகை ரயில் பெட்டிகள் ரிசர்வ் இல்லாத கோச்சுகளுக்காக உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான டிசைனிங் முடிந்த பின் கட்டுமான பணிகள் அனுமதி பெற்று தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அன் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் ஜெனரல் டிக்கெட்டுகளுக்கான விதிகளையும் ரயில்வே மாற்றி உள்ளது.

ஜெனரல் டிக்கெட்: அதன்படி அன் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் ஜெனரல் டிக்கெட்டுகளில் , 199 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு காலக்கெடு உள்ளது. அதாவது டிக்கெட் வாங்கி 3 மணி நேரத்திற்குள் பயணம் செய்ய வேண்டும்.
அதாவது இன்று குமரி டூ நெல்லை செல்கிறீர்கள் என்றால், 12 மணிக்கு டிக்கெட் எடுத்தால் 3 மணிக்குள் ரயிலில் ஏறி இருக்க வேண்டும். அதுவே நீண்ட தூர பயணம் என்றால் அதாவது பயணம் 200 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த விதி பொருந்தாதது. 3 நாளைக்கு முன் கூட டிக்கெட் எடுக்க முடியும்.
அதாவது குமரி டூ சென்னை செல்கிறீர்கள் என்றால், இன்று ஜெனரல் டிக்கெட் எடுத்தால் அடுத்த 3 நாளுக்குள் ரயிலில் ஏறி இருக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications