Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ரூவல் இல்லாத பட்டா வீட்டு மனைகள்! ஒரே பதிவின்கீழ் ஒற்றைச்சாளர முறை?தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு எக்டேருக்குள் அபிவிருத்தி செய்யப்படும் புதிய வீட்டுமனை பதிவுகளுக்கு திறந்தவெளி நிலம் (OSR) ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது

நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை நீங்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கான "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற பிரத்யேக இணையதள சேவைகளைத் தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

Unapproved plots patta land Registration Department

தமிழக அரசு: இதன் பொதுமக்கள், தங்களது நிலம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டாக்களை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

https://eservices.tn.gov.in என்ற வெப்சைட்டி பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

வீட்டு மனைப்பட்டா: தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு செய்து தந்திருக்கும் இந்த செயல்பாட்டிற்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஏற்கனவே தன்னுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மலைப்பகுதிகளின் அருகில் பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை எளிமையான முறையில் அனுமதி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பெயிரா மீண்டும் முக்கிய கோரிக்கை முன்வைத்துள்ளது.

மலைப் பகுதியின் எல்லையிலிருந்து 500 மீட்டருக்கு வெளியில் உள்ள நிலங்களை கிராமம் அடிப்படையில் இல்லாமல் புல எண்கள் வாரியாக வகைப்படுத்தி HACA தடையின்மை சான்று பெறுவதற்கு ஏதுவாகவும் வீட்டுமனை பிரிவாக ஏற்படுத்துவதற்கு ஏதுவாகவும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாகவே பெயிரா வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது இதே கோரிக்கையை வலுவாக்கியிருக்கிறது.

நேரில் சந்திப்பு: இது தொடர்பாக பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி ஆறுமுகம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் DTCP இயக்குனர் கணேசன் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள்.

கடந்த 22.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 2500 சதுரடி பரப்பளவு உள்ள மனையில் 3500 சதுரடி வரை, (2 அலகு) தரை தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு "எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில், பொதுமக்கள் வழங்கும் சுயசான்றிதழ் அடிப்படையில், உடனடி கட்டட திட்ட அனுமதி பெறும் திட்டத்தை கட்டமைத்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

அரசாணை: அதேபோல, மலைப்பகுதிகளின் (HACA) அருகில் மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்களும், வீட்டுமனை அபிவிருத்தியாளர்களும் வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி பெறும் வகையில் மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கி எதிர்வரும் 2024 நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்து அரசாணை எண். 132/2024 ஆக வெளியிட்டமைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், ஒரு எக்டேருக்குள் அபிவிருத்தி செய்யப்படும் புதிய வீட்டுமனை பதிவுகளுக்கு திறந்தவெளி நிலம் (OSR) ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பழைய வீட்டுமனை பிரிவில் அபிவிருத்தியாளர்களின் விற்பனைக்குரிய சமுதாயக்கூடம், பள்ளிகள், மருத்துவமனைகள், சிறுவர் பள்ளி, சுகாதார மையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை மனைகளாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

வீட்டு மனைகள்: அதுமட்டுமல்ல, பதிவு பெற்ற பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் மாநிலம் முழுவதும் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும், மலைப்பகுதிகளின் அருகில் பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை எளிமையான முறையில் அனுமதி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

பெயிரா தலைவரும், பெயிராவின் பொறுப்பாளர்களும் விடுத்திருக்கும் இந்த கோரிக்கைகள், மக்களின் கவனம் பெற்று வருகிறது.. அத்துடன், இது தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+