வாடகை வீட்டில் நடிகை அஞ்சுவின் அசிங்கம்.. மெத்தைக்கு அடியில் அதென்ன? விஐபியை காட்டி தந்த வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சினிமா பிரபலங்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் கேரள நடிகை அஞ்சு கிருஷ்ணன் மற்றும் அவரது தோழியான நடிகை வின்சி நிவேதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மெத்தப்பெட்டமைன், ஓஜி கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நடிகைகளிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது..!

கஞ்சா விற்பனை தொடர்பாக கைதான விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரிடம் நடத்திய விசாரணையின் மூலமே அஞ்சு கிருஷ்ணன், வின்சி நிவேதா என்ற இரண்டு நடிகைகளும் சிக்கினார்கள்.. கேரள சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அஞ்சு கிருஷ்ணன், இப்போது சர்வதேசக் கும்பலுடன் இணைந்து செயல்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anju Krishna Vinci Nivetha Cinema VVIPs

இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், சர்வதேசப் போதைப்பொருள் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஞ்சு கிருஷ்ணா வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணன், வின்சி நிவேதாவிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த 2 ஆண்டுகளாக 2 நடிகைகளும் ரகசியமாகப் போதைப்பொருள் விற்று பல கோடிகளைச் சம்பாதித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட வாய்ப்பு இல்லாததால், நானும், தோழி அஞ்சு கிருஷ்ணாவும் சினிமா பிரபலங்களுக்கு போதைபபொருள் விற்பனையில் ஈடுபட்டோம் என்று நடிகை வின்சி நிவேதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில்,"என் சொந்த ஊர் தர்மபுரி. MCA கணினி அறிவியல் படித்துள்ளேன். சினிமா மீதான மோகத்தில் நடிகை மற்றும் இயக்குநராக வேண்டும் என்று , 2021ல் சென்னைக்கு வந்தேன்.

2 நடிகைகள் கைது

குறும்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர் தான் எனக்கு, பவுடர் எனப்படும் 'மெத் ஆம்பெட்டமைன், கோகைன்' உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்தார். அதன் பிறுகு இத்தகைய போதைக்கு நான் அடிமை ஆனேன்.

குறும்பட இயக்குநர், என்னை பல இயக்குநர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் மூலம், சினிமாவில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் தேவைக்காக போதைப்பொருள் விற்பர்களை தேடி அலைந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர் மூலம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின்ஷா, 27, என்பவரின் நட்பு கிடைத்தது.

இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, மெத் ஆம்பெட்டமைன்' கடத்தி வந்து என்னிடம் விற்று வந்தார். நாளடைவில் அவரும் நானும், போதைப் பொருள் விற்கும் கூட்டாளிகளாக மாறினோம். சென்னையில் நடந்த இரவு மது விருந்து ஒன்றில், நடிகை அஞ்சு கிருஷ்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அவர், வெள்ளிமலை என்ற படத்தில் நடித்து இருந்தார். கேரளாவிலும் மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

வாடகை வீடு - மெத்தைக்கு கீழே

அவருக்கும் எனக்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் அன்றாட செலவுக்கு கூட, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நெருங்கிய நட்பு அஞ்சு கிருஷ்ணாவுக்கு, சினிமா பிரபலங்கள் அதிகமானோர் அறிமுகமாகி இருந்தனர். பட வாய்ப்பு தொடர்பாக அவர்களுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார். இதனால், அவரையும் போதைப் பொருள் விற்பனையில் களமிறக்கினோம்.

போதைப் பொருள் விற்பதற்காகவே, சென்னை, வடபழனியில் வாடகை வீடு எடுத்து தங்கினோம். எங்களின் படுக்கை அறை மெத்தைக்கு கீழ் தான், மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைப்போம். விபின்ஷாவுக்கு சென்னையில் நண்பர்கள் அதிகம். அவர் வாயிலாகவும் போதைப் பொருள் விற்று வந்தோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிக்க போகும் சினிமா விவிஐபிகள்

இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு போதை பொருள் சினிமா பிரபலங்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதை பொருள் எந்தெந்த நடிகைகள் மற்றும் சினிமா விஐபிக்கள் யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தும் வகையில் 5 நாள் காவலில் நடிகைகள் அஞ்சு கிருஷ்ணன், வின்சி நிவேதா மற்றும் ஆண் நண்பர் விபின்ஷாவை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் சினிமா துறையில் அவர்களிடம் யார் யார் போதை பொருள் வாங்கினார்கள் என்ற முழுமையான தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள் போலீசார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+