அசைக்க முடியாத கோட்டையில் ஆட்டம்! திமுகவுக்கு விழுந்த மரண அடி.. மக்கள் மனதில் இருந்தது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தேர்தல் களம் இன்று எதிர்பாராத திருப்பங்களை சந்தித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராகப் பெரிய அளவில் அதிருப்தி அலை இல்லை என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், இப்போது வெளியான தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை தலைகீழாக மாற்றியுள்ளன. குறிப்பாக, அசைக்க முடியாத கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது.

தபால் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பொதுவாக அரசு ஊழியர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையிலேயே பல அமைச்சர்கள் பின்தங்கி காணப்பட்டனர்.

DMK election setback TN Election results 2026 Senior ministers trailing KN Nehru back in Trichy Alandur TM Anbarasan result DMK fortress shaken Silent wave in TN Tamil Nadu election live updates DMK vs TVK Minister trailing in first round Election results 2026 DMK leads and lags TN assembly election trends Shocking results for DMK Postal ballot results TN 2026 2026

திமுக சீனியர்கள்

பெரும்பாலான தொகுதிகளில் மூத்த அமைச்சர்கள் கே தபால் வாக்கு எண்ணிக்கையிலிருந்தே பின்னடைவைச் சந்தித்தனர்.. அங்கே தவாக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்றது ஆளுங்கட்சிக்கு விழுந்த முதல் அடியாக பார்க்கப்படுகிறது.

இதே நிலைதான் தமிழகத்தின் பல முக்கிய தொகுதிகளிலும் நீடித்தது. பலம் வாய்ந்த அமைச்சர்கள் போட்டியிட்ட பெரிய தொகுதிகளில் கூட, வெற்றி வாய்ப்பு கடைசி சுற்று வரை ஊசலாடும் நிலையே காணப்பட்டது. மும்முனைப் போட்டி நிலவிய இடங்களில் வாக்குகள் சிதறுவது ஒருபுறம் இருந்தாலும், அமைச்சர்களின் தொகுதிகளிலேயே மக்கள் மாற்றுச் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?

வெளியில் தெரியாத அதிருப்தி அலை மக்கள் மத்தியில் புகைந்து கொண்டிருந்ததையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முறையாக மேற்கொள்ளாதது அல்லது உள்ளூர் மட்டத்திலான நிர்வாகச் சிக்கல்கள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என தெரிகிறது.

மேலும், அரசு மீதான பொதுவான விமர்சனங்களை விட, குறிப்பிட்ட அமைச்சர்களின் மீதான தனிப்பட்ட அதிருப்தி இந்த வாக்குப்பதிவில் எதிரொலித்திருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதும், எதிர்க்கட்சிகளின் வியூகங்களும் அமைச்சர்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

தவெக மாஸ் என்ட்ரி

அதுமட்டுமல்ல, திமுக அமைச்சர்களின் இந்த தொடர் பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மும்முனைப் போட்டியும், அதன் விளைவாகப் பிரிந்துள்ள வாக்குகளுமே ஆகும்..

குறிப்பாக, நடிகர் விஜய்யின் தவெக முதல்முறையாகக் களமிறங்கி, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெருமளவில் கவர்ந்திருப்பது திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஆளுங்கட்சி மீதான இயல்பான அதிருப்தி, விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் மட்டத்திலான நிர்வாகச் சிக்கல்கள் அமைச்சர்களுக்கு எதிராக திரும்பியுள்ளன.. அசைக்க முடியாத கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தேர்தல் வியூகமும், மக்கள் மாற்றத்தை விரும்பி பதிவு செய்த வாக்குகளுமே மூத்த அமைச்சர்களை பின்னடைய செய்துள்ளதாக தெரிகிறது.

சாயங்காலம் வரை டென்ஷன்

பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு சுற்றும் முடிவடையும் போது முன்னிலை வகிப்பவர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்.

பல அமைச்சர்கள் தங்களின் பலத்தை நிரூபிக்கக் கடைசி சுற்று வரை போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த ரிசல்ட், ஆளுங்கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

மக்களின் மவுனப் புரட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றம் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+