சில்லு சில்லா போன காங்கிரஸ் கணக்கு? திமுகவுடன் சேராவிட்டால் பாதிப்பு யாருக்கு? ராகுலின் அந்த முடிவு?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன... இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்ற கேள்விதான் அரசியல் களத்தையே தகிக்க வைத்து வருகிறது... இப்படிப்பட்ட சூழலில் இன்றைய தினம் தமிழகம் ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அப்படியானால் தமிழக காங்கிரஸ் என்ன முடிவெடுக்க போகிறது?
திமுகவிடம் இருந்து காங்கிரஸ் 38 தொகுதிகளை மட்டுமல்ல, ஆட்சியில் பங்காக மூன்று அமைச்சரவை பதவிகளையும் திமுகவிடம் கோரி வருவது, கூட்டணியை இன்னும் இழுபறியிலேயே வைத்திருக்கிறது..

காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்தாலும், இந்த முறை தனது அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளது.. தேர்தல் நெருங்கும் சூழலில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆட்சியில் பங்கு - செல்வப்பெருந்தகை
ஆனால், திமுக தரப்பில் இந்த கோரிக்கைக்கு தெளிவான ஆதரவு இல்லை. கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.
ஆனால் அதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து, ஆட்சியில் பங்கு குறித்து இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி இணைந்து எடுப்பார்கள் என்றும் கூறினார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது வெளிப்படையாகிறது.
இந்த சூழலில், திமுகவுடன் பேச்சு தோல்வியடைந்தால் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் சூசகமாக பேசி வருகின்றனர். இப்போது நடைபெறும் ஜனநாயகன் தொடர்பான பிரச்சனையில் விஜய் நேரடியாக குரல் கொடுக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் எம்பிக்கள் தீவிரமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ராகுல் காந்தியின் போராட்ட வீடியோக்களை விட, விஜய்க்கு ஆதரவான பதிவுகளை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அதிகம் ஷேர் செய்வதும் அரசியல் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
லிஸ்ட் ரெடி
இந்த பின்னணியில்தான், டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி 28 அன்று ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருவார் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இன்றே நீலகிரி கூடலூரில் நடைபெறும் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் வருகிறார்.
இந்த நீலகிரி பயணத்தின் போதே, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது எந்த கூட்டணி காங்கிரசுக்கு அதிக அரசியல் பலன் தரும்? கடந்த தேர்தல் முடிவுகள், வாக்கு வங்கி பகுப்பாய்வு உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ராகுலிடம் சமர்ப்பிக்க போகிறார்களாம்.. அவர்கள் தரும் பட்டியலின அடிப்படையில் ஆலோசனைகள் நடத்த போகிறார்களாம்,
சிறுபான்மையினர் வாக்கு வங்கி
இது ஒருபுறமிருந்தாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி விவாதங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சிறுபான்மையினர் வாக்கு வங்கி தான்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் பெரும்பாலும் பாஜக எதிர்ப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்து வாக்களித்து வருகிறார்கள்.. அந்த வாக்குகள் இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே பெரும்பாலும் ஆதரவாக இருந்து வந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தனித்துவமான நம்பகத்தன்மை இருப்பதாக சிறுபான்மையினர் கருதுகின்றனர்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடைந்தால், இந்த சிறுபான்மை வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது திமுகவுக்கு மட்டும் அல்ல, காங்கிரசுக்கும் இழப்பை ஏற்படுத்தும் சூழலாக மாறக்கூடும்.
முரண்பாடுகள் - கூட்டணி முறிவு?
அதே நேரத்தில், தவெக போன்ற புதிய அரசியல் அமைப்புகள் மீது சிறுபான்மையினர் முழுமையான நம்பிக்கை வைக்க இன்னும் தயக்கம் இருப்பதும் ஒரு உண்மை. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் தான் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து போகாமல், திமுக தலைமையிலான கூட்டணிக்கே செல்லும் என்ற கணக்கை இரு கட்சிகளும் வைத்துள்ளன.
அதனால் தான், ஆட்சியில் பங்கு, அமைச்சரவை பதவி போன்ற விவகாரங்களில் வெளிப்படையான முரண்பாடுகள் இருந்தாலும், கூட்டணியை முற்றிலும் உடைக்கும் முடிவை எடுக்க இரு தரப்பும் தயங்கும் நிலை காணப்படுகிறது... அதுமட்டுமல்ல சிறுபான்மை வாக்கு வங்கி இழந்தால், அது தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்த அமைதியான சமரச பேச்சுகளுக்கு பிரதான காரணமாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications