Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன்னல் வழியே காலைப் பிடித்து இழுத்த ‘அங்கிள்’ நடிகர்! போட்டு உடைத்த ஷகீலா

Subscribe to Oneindia Tamil

கேரளா: மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பால் தனது திரையுலக வாழ்க்கையை அழித்துவிட்டதாக, பல ஆண்டுகளாகப் போராடியும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையானது மலையாள சினிமா உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதன் எதிரொலியாகக் கடந்த வாரம் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் பதவி விலகினார். கூடவே சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த மம்மூட்டி இரண்டு நாட்கள் முன்னதாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

hema committee report malayalam cinema shakeela hema committee

ஆக, ஒட்டுமொத்த சங்கத்தின் மீதும் நீதிபதி ஹேமா கமிஷன் முன் சக நடிகைகள், திரைத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் கேரள நடிகர்கள் சங்கம் பெண்களுக்குப் பாதுகாப்புத்தர தவறி இருக்கிறது என்றே கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சில பகீர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் சில அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர்களைக் கேரள கம்யூனிஸ்ட் கட்சி அரசு காக்க முயல்வதாகவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் கேரளாவில் நடிகை ஷகீலா அளித்த பேட்டி ஒன்று பரபரப்பாக மாறியுள்ளது. அவர் மலையாள திரைப்பட உலகில் இருப்பதைப் போலவே தமிழ் சினிமாவில் அதிகம் நடைபெறுகிறது என்றும் அதைவிடத் தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தொடர்ந்து பேசிய ஷகீலா, 2000 ஆம் ஆண்டில், தனது திரைப்படங்களைத் தடை செய்ததற்கும், அவை தணிக்கைக்கு வருவதைத் தடுப்பதற்கும் அம்மாதான் காரணம் என்று ஷகீலா குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல இறந்துபோன ஒரு நடிகருக்காக அம்மா சங்கம் தனக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஷகீலா, "நான் என்ன தவறு செய்தேன்? நான் படங்களில் நடித்தேன். திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டு வந்ததைத் தடுக்கும் விதமாக மீண்டும் ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் இழுத்துக் கொண்டு வந்தேன், என் படங்களிலிருந்து அரசுக்கு வழிவருவாய் வந்தது. நான் என்ன தவறு செய்தேன்?" என்று குமுறியுள்ளார்.

கூடவே, "தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து சினிமா துறையிலும் இந்தப் பாலியல் பிரச்சினை உள்ளது. பாலிவுட்டில் Nepotism தான் உள்ளது. அங்கே தென்னிந்திய சினிமாவில் நடப்பதுபோல் இல்லை. இங்கே வாய்ப்பு தரும்போது நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிச் சொல்லி விடுகிறார்கள். இவரை அனுசரித்துப் போக வேண்டும் எனப் பேசி வைத்துவிட்டுத்தான் வாய்ப்பே தருகிறார்கள்" என்கிறார் ஷகீலா.

கேரளாவில் உள்ள ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்த இவர், "வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கேரள சினிமாவுக்குள் வந்து அதிகம் பணம் சம்பாதித்தால் அவரை எளிதில் விட்டுவைக்கமாட்டார்கள். எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரம் பற்றிக் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து பேசி வருகிறேன். ஆனால் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் இனி மலையாள படங்களில் நடிக்க விருப்பமில்லை என அறிவிக்கும் அளவுக்கு எனக்கு அம்மா சங்கம் துரோகம் செய்ததாக உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

இதை ஏதோ வெறுப்புடன் தான் பேசவில்லை என்றும் அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்தே பேசுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். "எனக்குப் பெயரையும் புகழையும் தந்தது கேரளாதான். கேரள மக்களுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது படங்களைத் திரையரங்குகளுக்கு வரவிடாமல், தணிக்கைக்கு அனுப்ப அனுமதிக்காமல் மறைமுகமாக அவர்கள் எனது விவகாரத்தில் அநீதி செய்தார்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன்" என்று அவர் நொந்துபோய் பேசியுள்ளார்.

மேலும், "நான் மலையாளத்தில் நடித்த காலத்தில் பல நடிகைகள் மீது நடத்தப்பட்ட பாலியல் விவகாரம் குறித்து நான் குரல் கொடுத்துள்ளேன். பாதிக்கப்பட்ட பலரை நான் காப்பாற்றியும் விட்டுள்ளேன். ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள திரைத்துறையினர் இரவில் போய் கதவை தட்டி அழைப்பார்கள் என்று கூறியுள்ளது. அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. நானே பார்த்துள்ளேன். நான் அங்கிள் என்று கூப்பிடும் ஒரு பெரிய நடிகரே அதை செய்துள்ளார். ஜன்னல் வழியே கையைவிட்டு படுக்கையிலுள்ள நடிகை காலை இழுத்துள்ளார்கள். அவர் பெயரைச் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்" என்று ஒரு அதிர்ச்சி தகவலை முன்வைத்துள்ளார்.

மேலும், மலையாள நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காதது குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை என்ன நீதி கிடைத்தது என்றும் அவர் ஆவேசமாகக் கேட்டுள்ளார். நடிகை ஷகீலா இந்தளவு வெளிப்படையாகப் பேசினாலும் இதுவரை தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார். ஹேமா கமிட்டியின் அளித்துள்ள நம்பிக்கைதான் பலரை இன்று தைரியமாகப் பேச வைத்துள்ளது என்பதை இவர் ஒப்புக்கொண்டார். எல்லா மொழி திரைப்படத் துறையிலும் இதேபோன்ற குழுவை அமைக்கவேண்டும் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+