சிங்கார சென்னை 2.o திட்டத்தில்.. இந்த 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள்.. போக்குவரத்து நெரிசல் குறையுமா
சென்னை: சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் தலைநகர் சென்னையில் புதிதாக மூன்று பாலங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Recommended Video
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் எனப் பல பொது போக்குவரத்து இருந்தாலும் கூட, சொந்த வாகனத்தில் பயணிக்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இதனால் சென்னையையும் போக்குவரத்து நெரிசலையும் பிரிக்க முடியாததாகி விட்டது. தலைநகர் சென்னையில் தினசரி 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

3 புதிய மேம்பாலங்கள்
சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதேபோல தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் 90 கோடி ரூபாயில் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

4 வாரங்களில் பணிகள் தொடங்கும்
மூன்றாவதாக 75 கோடி ரூபாயில் மதிப்பில் ஓட்டேரி நல்லா அருகே இரண்டு வழி மேம்பாலத்தைக் கட்டவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகளுக்குத் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்கு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை இறுதி செய்யப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் உடனடியாக முதற்கட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய பாலங்கள்
ஒரு புறம் புதிய பாலங்களைக் கட்டும் பணிகள் என்றால், மறுபுறம் ஏற்கனவே இருக்கும் பாலங்களை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எழும்பூர் பந்தியன் சாலை மேம்பாலம், கிண்டி ஐஐடி மேம்பாலம், கோட்டூர்புரம் மேம்பாலம் ஆகியவை முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 3 மேம்பாலங்களும் அழகுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.o
முன்னதாக, கடந்த 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தலைநகரை அழகுபடுத்தும் பணிகளையும் சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும் நடந்தது. இருப்பினும், அதிமுக ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிங்கார சென்னை 2.o திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications