‛‛நாட்டின் முக்கிய 2 பிரச்சனை இதுதான்’’.. தேர்தல் சமயத்தில் வெளிவந்த ரிப்போர்ட்! திரும்பும் பாஜக
சென்னை: இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் வேலையின்மையும், விலைவாசி உயர்வுமே முக்கிய பிரச்னை என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக கடந்த 2 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளை இணைத்து பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடையே CSDS-Lokniti அமைப்பு ஓர் ஆய்வை நடத்தியது. அதாவது, வாக்காளர்களின் முதன்மை பிரச்னை எது என்பதுதான் இந்த ஆய்வு. வேலையின்மை, விலைவாசி உயர்வு, வளர்ச்சி ஆகிய மூன்றுதான் முதன்மை பிரச்னை என்று வாக்காளர்கள் கூறியுள்ளனர். இது மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
சமீபத்தில் இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிக்கையை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவின் வேலையற்ற தொழிலாளர்களில் சுமார் 83% பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், வாக்காளர்களின் முதன்மை பிரச்னையாக வேலையின்மை இருப்பதாக ஆய்வுகள் வெளி வந்திருப்பது, மத்திய அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
CSDS-Lokniti ஆய்வின்படி, 2019ம் ஆண்டு வேலையின்மை பிரச்னை குறித்து பேசியவர்களை விட, இந்த ஆண்டு கூடுதலாக 27% பேர் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பெருநகரங்களில் 65% பேரும், நகரங்களில் 59% பேரும், கிராமப்புறங்களில் 62% பேர் வேலையின்மைதான் முக்கிய பிரச்னையாக தெரிவித்துள்ளனர். பாலின ரீதியாக பார்த்தால், ஆண்களில் 65% பேரும், பெண்களில் 59% பேரும் வேலை கிடைப்பது மிக கடினமானதாக இருப்பதாக கூறியுள்ளனர்.
சுருக்கமாக சொல்வதெனில் வெறும் 12% பேர் மட்டுமே வேலை கிடைப்பது எளிதானது என்று கூறியுள்ளனர்.
சாதி வாரியாக பார்த்தால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்கள் 63% பேர் வேலையின்மை முக்கிய பிரச்னை என்று கூறியுள்ளனர். பழங்குடி மக்களில் 59% பேர் இதே கருத்தை கூறியுள்ளனர். இஸ்லாமியர்களில் 69% பேர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். அதே உயர் சாதியை சேர்ந்தவர்களில் 17% பேர் மட்டுமே வேலை கிடைப்பது பிரச்னையாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
அதேபோல, விலைவாசி உயர்வு குறித்து 2019ம் ஆண்டு பேசியவர்களை விட இப்போது 19% கூடுதல் மக்கள் தங்களது கவலைகளை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களில் 76% பேர் விலைவாசியை முக்கிய பிரச்னையாக கருதுகின்றனர். பட்டியல் வகுப்பினரில் 75% பேரும், இஸ்லாமியர்களில் 76% பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 71% மக்கள் விலைவாசி உயர்ந்திருப்பதாக கூறியுள்ளனர்.
மறுபுறம் ஊழல், ராமர் கோயில் விவகாரம் ஆகியவை குறித்து பெரிய அளவில் யாரும் தங்கள் கவலைகளை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"லோக்சபா தேர்தலையொட்டி ராமர் கோயில் திறப்பு தங்களுக்கு கைகொடுக்கும் என பாஜக நினைத்திருந்தது. ஆனால், அதைவிட முக்கிய பிரச்னைகளை தற்போது மக்கள் கவனிக்க தொடங்கிவிட்டார்கள்" என அரசியல் விமர்சகர்கள் இந்த ஆய்வை மேற்கோள் காட்டி கூறியுள்ளனர். "அதேபோல அரசியல் களத்திலும் மாற்றங்களை பார்க்க முடிகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் பேசி வந்த நிலையில், அது 370வதாக குறைந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications