மைசூரு மேஸ்திரி மீது அமுதாவுக்கு குபீர்னு வந்த காதல்.. உடனே மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட மனைவி.. ஐயோ கணவன்
சென்னை: மைசூரு அருகே தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியும் கள்ளக்காதலனும் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. விபத்து என்று எல்லோரும் நம்பிய இந்தச் சம்பவம், போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றாலும், இந்த பரபரப்பும், டென்ஷனும், பீதியும் மக்களிடம் குறையவில்லை.
மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் உள்ள கூர்னேகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவரப்பா.. 38 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்தார்.. கடந்த 16-ம் தேதி சாலையோரம் ஜவரப்பா சடலமாக விழுந்து கிடந்தார்..

முதலில் இது ஒரு விபத்து என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்.. ஆனால், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. வாகன விபத்தில் ஏற்படும் காயங்களாக இவை இல்லையென்பது போலீசாரின் கவனத்திற்கு வந்தது.. ஜவரப்பாவின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், இது விபத்துக்கு ஒத்த காயமில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்..
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார்.. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஜவரப்பாவின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன..
மேஸ்திரி கள்ளக்காதல்
அதாவது ஜவரப்பாவிடம் மேஸ்திரியாக வேலை பார்த்த சித்தேஷ் என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நட்பின் காரணமாக சித்தேஷ் அடிக்கடி ஜவரப்பாவின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.. அப்போது ஜவரப்பாவின் மனைவி அம்ருதாவுடன் சித்தேஷுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் ஜவரப்பாவுக்குத் தெரியவரவே, அவர் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அம்ருதாவும் சித்தேஷும், தங்களுக்கு இடையூறாக இருக்கும் ஜவரப்பாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்..
ஸ்கெட்ச் போட்டு கணவரை கொன்ற அம்ருதா
சம்பவத்தன்று சித்தேஷ் ஜவரப்பாவை மது குடிக்கலாம் என்று ஆசை காட்டி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.. அங்கு வைத்து ஜவரப்பாவுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்..
பிறகு சித்தேஷ் ஜவரப்பாவின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்று உடலைச் சாலையோரம் வீசிவிட்டு தப்பியோடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் ஜவரப்பாவின் மனைவி அம்ருதாவின் நடவடிக்கைகளை கண்காணித்து இது கொலை என உறுதி செய்தனர்.. மேலும், சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ருதா மற்றும் சித்தேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. ஒரு சாதாரணப் பழக்கம் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
குடும்ப வன்முறைகள் - தீர்வு என்ன
நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் இந்தியாவில் தலைதூக்கி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகப் பேசித் தீர்ப்பதே குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கான முதல் படி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
திருமண உறவில் ஈர்ப்பு குறைந்து மூன்றாம் நபரின் தலையீடு ஏற்படும் சூழல் உருவானால், வன்முறையில் இறங்கித் தற்கொலைக்கோ அல்லது கொலைக்கோ துணியாமல், சட்டப்பூர்வமாகப் பிரிந்து செல்வதே இரு தரப்பினருக்கும் நாகரிகமான தீர்வாகும்.. சமூக வலைதளப் பயன்பாட்டில் சுயக்கட்டுப்பாடு, குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதல் மற்றும் மீற முடியாத தனிமனித ஒழுக்கம் ஆகியவையே இத்தகைய சமூகச் சீரழிவுகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்..!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications