மகேந்திரன் மதுரையில் நம்ப முடியாத ட்விஸ்ட்..திமுகவிற்கு உசிலம்பட்டியில் தாரைவார்த்த அதிமுக?
சென்னை: மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி யாருக்கு என்ற பரபரப்பு நீடித்து கொண்டே வந்த நிலையில், திடீரென ஒரு அதிரடி திருப்பம் அங்கே நடந்துள்ளது.. கடந்த மாதம் வரை, அதிமுகவின் உட்கட்சிப் பூசலிலும், சீட் கேட்டு முட்டிமோதும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் இந்த தொகுதி கடும் குழப்பத்தில் மூழ்கியிருந்தது. ஆனால், இப்போது செம ட்விஸ்ட் அனைவருக்கும் காத்திருக்கிறது.. அது என்ன?
தேர்தல் நெருங்கி வருவதால், அதிமுக சார்பில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, அமமுகவிலிருந்து வந்த மகேந்திரன், மற்றும் பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவன் என பலரும் உசிலம்பட்டி தொகுதியை மையப்படுத்தி காய் நகர்த்தி வந்தனர்.

மதுரை உசிலம்பட்டி தொகுதி
இதற்கு நடுவில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், சமீபத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, கள நிலவரமே டோட்டலாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே நிலவும் அதிகாரப் போட்டி உசிலம்பட்டியிலும் எதிரொலித்தது... ஓபிஎஸ் ஆதரவாளராக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஐயப்பன், இம்முறை மீண்டும் சீட் கேட்டு காத்திருந்தார்.
அதேநேரம், முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் ஆசியுடன் மகேந்திரன் தீவிர களப்பணியில் இறங்கினார். அதிமுகவின் வசம் இந்தத் தொகுதி இருக்குமா அல்லது கூட்டணிக் கட்சியான பார்வர்டு பிளாக்கிற்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த குழப்பங்கள் அதிமுக தொண்டர்களை தவிக்க வைத்தது.
மகேந்திரன் வேட்பாளர்
இந்த தத்தளிப்பிற்கு மத்தியில், திமுக மிகவும் நுணுக்கமான அரசியல் வியூகத்தை வகுத்து, உசிலம்பட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.
பழம்பெருமை வாய்ந்த பார்வர்டு பிளாக் கட்சியின் கோட்டையாக அறியப்பட்டாலும், அதிமுகவின் பலவீனமான சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்ற திமுக களம் இறங்கியுள்ளது. தற்போது, அந்த அதிரடி திருப்பமாக, சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ஐயப்பன் திமுகவிற்கு தாவியுள்ளார். இது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், இம்முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இது தொகுதி முழுவதும் திமுகவின் வலிமையை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
முக்குலத்தோர் வாக்குகள்
உசிலம்பட்டி நகராட்சி, எழுமலை பேரூராட்சி மற்றும் முக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சுமார் 2.64 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இத்தொகுதியில், முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன.
தற்போது, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், பொதுமக்கள் மத்தியில் திமுகவின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன. உசிலம்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியங்களை ஏற்கனவே திமுக கைப்பற்றியிருப்பது, அவர்களின் அடித்தளம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை காட்டுகிறது.
திமுக சபாஷ்
இதன் காரணமாக, இம்முறை உசிலம்பட்டியில் திமுக நிறுத்தும் வேட்பாளர் வெற்றியை மிக எளிதாக வெல்வார் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.. அதனால்தான் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் திமுகவிற்கு ஆதரவான குரல்கள் இப்போதே ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அதிமுகவில் சீட் யாருக்கு என்ற குழப்பம் நீடித்து வரும் சூழலில், திமுக மிகவும் தெளிவாகவும், திட்டமிட்டும் தனது வேட்பாளரை களம் இறக்கி வெற்றியை நோக்கி நடைபோடுகிறது.
இத்தொகுதியின் அரசியல் வரலாறு பார்வர்டு பிளாக் கட்சியை உயர்த்திப் பிடித்தாலும், இன்றைய சூழல் திமுகவின் பக்கம் காற்று பலமாக வீசுவதை தெளிவாக உணர்த்துகிறது. அதிமுகவின் வேட்பாளர் தேர்வு தாமதமும், உட்கட்சிப் பூசலும் திமுகவின் வெற்றியை மேலும் எளிதாக்கியுள்ளன என்பதுதான் தற்போதைய கள எதார்த்தம்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications