• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்!

|

சென்னை: ஒவ்வொரு வருடமும் நிகழும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.. இந்த சர்ச்சைகள்தான் சிலரது மூலதனம்.. அதை வைத்து காலம் தள்ளும் பேர்வழிகளும் பலர் உண்டு.. அப்படி 2020-ல் சர்ச்சைகளின் மொத்த உருவமாக திகழ்ந்தவர் ரெஹானா!

அன்று சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தபோது, அங்கு மலைஏற சென்றவர்தான் பாத்திமா ரெஹானா.. செயற்பாட்டாளர்.

இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. இதற்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை அங்கிருந்து நீக்கிவிட்டனர். இதற்கு பிறகுதான் அடுத்த பிரச்சனையில் சிக்கினார்.

 யூடியூப் வீடியோ

யூடியூப் வீடியோ

ஜூன் 19-ம் தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் படுத்திருந்தார்.. அவரது உடலில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைந்தனர்.. அதற்கு 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டு அதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார்.

 நிர்வாணம்

நிர்வாணம்

"தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது... பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்.. பாலியல், நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை திரும்பவும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

ஆண்களின் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்களின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை.. கால்கள் இருப்பதை கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது. அதே நேரத்தில் ஆண் நின்றால் ஆபாசம் கிடையாது.. இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான்... அழகு பார்ப்பவரின் கண்ணில் உள்ளது.. அது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது" என்று அதற்கு ஒரு நீண்ட விளக்கமும் தந்திருந்தார்.. பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, சிறு குழந்தைகள் ஓவியம் வரைந்த பதிவு கேரளாவில் சர்ச்சையாக வெடித்தது.

ஆபாசம்

ஆபாசம்

பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.. "ஒரு அம்மா, அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை... இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் பரவாயில்லை... ஆனால், அதை வீடியோவாக்கி பப்ளிக் பார்க்கும்படி பொதுவெளியில் விடும்போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது.. ஒரு பெரியவர், 2 சின்ன குழந்தைங்க இருக்காங்க. பெரியவர் என்ன செய்கிறார்கள் என்பதைகூட தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாத பருவம் இது.. இப்படி செயல்பட வைப்பது குற்றத்தன்மையுடையாகி விடுகிறது'' என்று மனநல மருத்துவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர்.

 ஆவேசம்

ஆவேசம்

மற்றொரு பக்கம் கேரள ஹைகோர்ட்டுக்கு வழக்கு சென்றது.. பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழக்கு மாறியது.. "போய் அவரை குரான், மனுஸ்மிருதி படிங்க.. அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கமா சொல்லப்பட்டிருக்கும்" என்று கேரள ஹைகோர்ட் நீதிபதிகள் ஆவேசத்துடன் கண்டித்தனர்..

 நீதிபதிகள்

நீதிபதிகள்

"இப்படியெல்லாமா எங்களுக்கு கேஸ் வரணும்? குழந்தைகளுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார்? இதெல்லாம் மோசமான ரசனையாக இருக்கிறதே.. "என்ன மாதிரியான வழக்கு எங்க கிட்ட வந்திருக்கிறது? மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்காலம்... அதுக்காக இதுபோன்ற செயல்களை எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாதது" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் அதிருப்தியை வெளியிட்டனர்.

 மாட்டுக்கறி

மாட்டுக்கறி

இந்த அளவுக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் அதிருப்தியை சம்பாதித்தவர் தான் ரெஹானா.. 4 நாளைக்கு முன்புகூட ஒரு சர்ச்சையை கிளப்பினார். ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு சென்று மாட்டுக்கறி சமைத்துவிட்டு, கோமாதா கறி என்று ஒரு பெயரை வைக்கவும், அது மேலும் வெடித்து கிளம்பி உள்ளது.. இன்னும் அந்த விவகாரம் முடியவில்லை என்றாலும், இந்த வருடத்தை இப்படியே பரபரப்பில் வைத்து வருகிறார் ரெஹானா!

 
 
 
English summary
Unforgettable 2020: Semi Nude Rehana Fathima video for her kids
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X