சென்னை அடுக்குமாடியில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவருக்கு.. மனைவி தந்த மறக்க முடியாத பரிசு
சென்னை: தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பெண் ஒருவர் போலீசாரிடம் பேசும் போது, கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். கஞ்சாவே இல்லை.. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை பெண் இப்படி சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.
கள்ளக்காதலை தடுக்க வழி தெரியாமல் பலர் தடுமாறி வருகிறார்கள். கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் வேறு ஒரு துணையுடன் தொடர்பில் இருப்பது அதிகரித்து வருகிறது. சமூகத்தில் இதை இருவருமே வெளியில் சொல்லாமல் அப்படியே தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மைகள் தெரியவந்தால், சட்டப்பூர்வமாக மனைவி அல்லது கணவனை பிரிய முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் தடையாக இருந்தால், பின்னாளில் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கின்றன.

அதேநேரம் இந்த கள்ளக்காதலால் பாதிக்கப்படும், பெண் அல்லது ஆண்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த ஒரு பெரிய நிவாரணமும் உடனே கிடைப்பது இல்லை.. ஏனெனில் கள்ளக்காதலில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்ட ரீதியாக எந்த ஒரு நிவாரணமும் இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சூழலில் கையும் களவுமாக பிடித்து அடிப்பது, தண்டிப்பது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கிறது. சில இடங்களில் வேறு மாதிரி நடக்கிறது.. அப்படித்தான் சென்னையில் நடந்துள்ளது..
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அந்த பெண் கூறும் போது, கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் தங்கி இருப்பதாக கூறினார். அந்த பொருளை அவர்கள் வேறு ஒருவருக்கு கை மாற்ற உள்ளார். உடனடியாக சென்றால் பிடித்து விடலாம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக இந்த தகவல் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டின் கதவை தட்டினர். கதவு திறக்கப்பட்ட உடன் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
அங்கு ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அறையை சோதனை செய்தனர். அங்கு கஞ்சா எதுவும் சிக்கவில்லை. பிறகு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது அந்த நபரின் மனைவி என்பது தெரிய வந்தது. தன்னுடன் வாழாமல் அங்கு இருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கி உல்லாசமாக இருந்துள்ளனராம். இதனால் இருவரையும் சிக்க வைக்க கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று அதிகாலை அந்த பெண்ணை காவல் நிலையம் வரவழைத்த போலீசார் பொய்யான தகவலை சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். மேலும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் இப்படி இருக்க கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்களாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications