லாட்ஜில் ரூமில் சந்தித்த காதல்.. மறக்க முடியாத இதயங்கள்! கேரளா விதுரா கிராமம் முழுக்க இதுதான் பேச்சு
சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா கிராமம் இயற்கை அழகு நிறைந்த அமைதியான பகுதியாகும்.. இங்குள்ள ரம்மியமான, அமைதியான சூழ்நிலை, பசுமையான மலைகள் குளுமையான காற்று நிலவுவதால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வந்துசெல்கிறார்கள்.. இந்த அமைதியான கிராம்தான் இன்று பரபரத்து கிடக்கிறது.. என்ன நடந்தது கேரளாவில்?
விதுரா பகுதி, சுற்றுலா பகுதியாகிவிட்டதால் இங்கு நிறைய லாட்ஜ்கள், காட்டேஜ்கள் உள்ளன.. அநத்வகையில், சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு லாட்ஜில், ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

கேரளா லாட்ஜ் ரூம்
சம்பவத்தன்று நீண்ட நேரமாக அவர்களின் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. பலமுறை கதவை தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அந்த ரூமில் இருவரும் உயிரற்ற நிலையில் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த இளைஞர், மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் வயது 28 என்றும் இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு வயது 31 என்றும் தெரிய வந்தது.
இருவரும் கள்ளக் காதலர்களாம்.. இருவருமே ஏற்கனவே திருமணமாகி, அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்கள்.. ஆனாலும், தங்களது குடும்பத்தை மறந்து, உற்றார் உறவினர்களை மறந்து இந்த கள்ளக்காதல் உருவெடுத்துள்ளது.. தொடர்ந்து பழகி வந்துள்ளனர்..
மறக்க முடியவில்லை
அவரவர் குடும்பத்தில் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்து, கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது... இதனால் தினம் தினம் தகராறு, சண்டையும் குடும்பங்களில் வெடித்துள்ளது.. இதனால் மனமுடைந்த கள்ளக் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த 2 குடும்பத்தினரும், உடனடியாக போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்திருந்தனர். இரு தரப்பு புகார்களையும் பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்..
விதுரா கிராமம் சோகம்
அப்போதுதான் விதுரா கிராமத்தில் உள்ள லாட்ஜில் 2 பேர் இறந்து கிடக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.. அங்கு விரைந்து சென்று பார்த்ததில் உயிரிழந்த இருவரும் மாயமான கள்ளக்காதல் ஜோடி தான் என்பது உறுதியானது.
காதல் விவகாரம் குடும்பத்தில் தெரிந்துவிட்டதால், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இந்த ஜோடி இருந்ததாக தெரிகிறது.. பயம், எதிர்கால கவலை காரணமாக இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் விதுரா பகுதி மக்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications