"டமார்" என உடைந்த மரபுகள்.. புதுமை + புரட்சி.. மலர்ச்சி கொடுத்த கே.பி.. உயர்ந்து நிற்கும் சிகரம்..!
இன்று இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் 91வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது
சென்னை: இந்திய துணை கண்டத்தில், தமிழ் சினிமாவை நிமிர வைத்த இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாள் இன்று..!
சமூகத்தின் பல்வேறு முரண்பாடுகளையும், அடிப்படையான கோளாறுகளையும், அம்பலப்படுத்தும் ஊடகமாக காதலை பயன்படுத்தியதில் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு..
அவரது பெரும்பாலான படங்கள் பெண்ணீயம் சம்பந்தப்பட்டதுதான்.. பெண்களை பற்றியும், பெண்களின் பிரச்சனைகள் குறித்தும், பெண்களின் பல்வேறு வகையான உணர்ச்சிக் குவியல்களையும் வைத்து நிறைய படங்களை இயக்கியவர் இவர்தான்.

இதயம்
அதாவது, பெண்களை இழிவுபடுத்தாமல், கொச்சைப்படுத்தாமல், ஆபாச பிண்டங்களாய் புரட்டி எடுக்காமல், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, வாழ்க்கைக்கான தேடல் இருக்கிறது, தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் போர்க்குணம் இருக்கிறது என்பதை பல படங்களில் எடுத்துக் காட்டியவர் பாலச்சந்தர்.

பாலசந்தர்
நிறைய பெண்களின் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து படம் எடுத்தவரும், காதலை வகை வகையாய் காட்டியவரும், அந்த காதலை வெளிப்படுத்த ஏராளமான உத்திகளை கையாண்டவரும் பாலசந்தர்தான். தான் வாழும் காலம் வரை திருவள்ளுவரையும், பாரதியையும் ரசிகர்களுக்கு நினைவூட்டி கொண்டேயிருந்தவரும் இவரேதான்.

துணிச்சல்
"நினைத்தாலே இனிக்கும்" ஜெயப்ரதா, தலையை இப்படியும் ஆட்டி, அப்படியும் ஆட்டி, ரசிகர்களையே குழப்பி, வியக்க செய்தவர்.. தாலி கட்டிவிட்டதால் மட்டுமே, உணர்ச்சி செத்த பொம்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை உணர்த்த, அந்த தாலியை கழட்டி கோயில் உண்டியலிலேயே போடும் துணிச்சலை ஹீரோயின்களுக்கு தந்தவர்..!

பக்குவம்
ஓடிப்போன கணவர் திரும்பி வந்தாலும், திருந்தி வந்தாலும், வருந்தி வந்தாலும் அவனை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் பண்பாட்டு பக்குவத்தை அந்த ஹீரோயின்கள் மூலம் நிரூபித்தவர்.."அபூர்வ ராகங்கள்" பைரவி, "சிந்துபைரவி" சிந்து, "மனதில் உறுதி வேண்டும்" நந்தினி, "அவர்கள்" அனு, என ஒவ்வொரு பெண் கேரக்டர்களும் உயிர்ப்புடன் உலாவ விட்டு இன்றுவரை நம்முடைய நெஞ்சில் நிறைய செய்தவரும் இவர்தான்!

நெருடல்
ஆனாலும், பாலசந்தர் படங்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை இல்லை.. சில படங்கள் நெருடலானவை, சில படங்கள் அபத்தமானவை.. உதாரணத்துக்கு, "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தை சொல்லலாம்.. படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்தியது என்ற பேச்சு இன்று வரை உள்ளது.. "தமிழ் பெண்கள் டெல்லியில் விலைமாதராகத்தான் இருந்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது" என்ற டயலாக்கை துணிச்சல் என்பதா? இழிவு என்பதா? என்ற உபகேள்வியும் எழவே செய்தது.

விமர்சனம்
அதுமட்டுமல்ல, "இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்ற கண்டிப்பு"களை படங்களில் காட்டியவர் என்றும் அண்ணாவை உயர்த்துவதே பெரியாரை மட்டம் தட்டுவதற்காகதான்.. "அச்சமில்லை அச்சமில்லை", "தண்ணீர் தண்ணீர்" படங்களில் பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை கடுமையாகக் கண்டித்தும், கேலி செய்தும் இருக்கிறார்" என்ற எதிர்மறை கருத்துக்கள் இப்போதுவரை விவாதங்களாகி வருகின்றன.

உறவு சிக்கல்
எனினும், எண்ணற்ற இளம் கலைஞர்களையும், டெக்னிக்கல் கலைஞர்களையும் உருவாக்கியவர் பாலசந்தர் என்பதை மறுக்க முடியாது.. உணர்ச்சிக்குவியலுடன், வாழ்வியல் போராட்டத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியவர் பாலச்சந்தர்.. உறவு சிக்கலையும், உளவியல் சிக்கலையும் கேரக்டர்களில் கொண்டு வந்து கொட்டி, ரசிகர்களை கிறுகிறுத்து விழ செய்தவர் பாலசந்தர்.

கம்பீரம்
சமுதாயத்தை கூர்மையாக்கி, நேராக்கவும், மனிதகுலத்தை ஒழுங்குப்படுத்தி சீர்படுத்தும் கருவியாக, சினிமாவையும் பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டியவர் பாலசந்தர்.. புதிய தலைமுறையினருக்கு புத்தொளியாகவும், ஆதர்ச சக்தியாகவும் திகழ்ந்தவர் பாலசந்தர்..!

சிகரம்
புதுமை + புரட்சி = கே.பாலச்சந்தர், இது மாற்ற முடியாத சரித்திர உண்மை.. இந்தியாவின் வடக்கில் உள்ளதுபோல், தெற்கு பகுதியில் தோன்றிய இந்த "சிகரம்" காலத்துக்கும் உயர்ந்து நிற்கும்.. என்றும் கம்பீரமாய்.. பிரம்மாண்டமாய்.. ஒய்யாரமாய்..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications