சென்னையில் கொடூரம்.. ரோட்டோரம் திடீரென வீசப்பட்ட ஆசிட்.. குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்!
சென்னை: சென்னையில் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலையமும் ஒன்று. இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு அங்குச் சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் பகீர் கிளப்புவதாக உள்ளது.

இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தைக்குத் தான் காயம் மோசமாக இருப்பதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் ஆசிட் பாட்டிலை வீசியுள்ளான். நல்வாய்ப்பாக அது நேரடியாக அவர்கள் மீது விழவில்லை. அந்த பாட்டில் அருகே விழுந்த நிலையில், அது தெறித்ததில் சாலையோரம் படுத்துக் கொண்டு இருந்தவர்கள் மீது பட்டுள்ளது.
இதில் குழந்தைக்குத் தான் பாதிப்பு மோசமாக ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அந்த ஆசிட் நெடியைச் சுவாசித்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஆசிட் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி கேமார காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications