ஆந்திராவை அலற விட்ட அத்தை.. மாப்ளை தலையில் இடி மேல் இடி! 8 பேரை மணமுடித்த 19 வயது வாணி யார் தெரியுமா
சென்னை: ஆந்திராவை சேர்ந்த 19 வயது பெண் 8 திருமணம் செய்துள்ளார்.. 9வது திருமணம் செய்த நேரத்தில்தான் வசமாக சிக்கி உள்ளார்.. கடந்த 2 நாட்களாகவே இந்த பெண் வாணியை பற்றிதான் சோஷியல் மீடியாவில் செய்திகள் வலம் வந்தவாறு உள்ளன.. தனிப்படை வைத்து அந்த பெண்ணை தேடும் படலம் தொடர்கிறது.. இப்போது அவரை பற்றின கூடுதல் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது,
ஆந்திராவை சேர்ந்த வாணி என்கிற 19 வயது பெண், இச்சாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். தன்னுடைய அத்தை சந்தியா என்பவருடன் சேர்ந்து திருமண மோசடி செய்து வந்துள்ளார்..
சமீபத்தில், வாணி கர்நாடகாவில் உள்ள துர்கா தேவி கோவிலில் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். பிறகு திருமணம் முடித்து சொந்த ஊருக்கு வாணியை புதுமாப்பிள்ளை அழைத்து சென்றுள்ளார். ஆனால், விஜயவாடா விசனிங்கபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பாத்ரூம செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகவிட்டார்.

19 வயது வாணி
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர், பல இடங்களில் தேடினார்கள்.. ஆனால் வாணி எங்கும் இல்லாததால் நேரடியாக இச்சாபுரம் சென்று வாணியின் அத்தையிடம் தகவலை சொல்லலாம் என்று சென்றிருக்கிறார்கள்.. ஆனால் அங்கே வாணி இருப்பதை கண்டு 2வது முறை அதிர்ச்சி அடைந்தனர்.அதற்கு பிறகுதான் இதுகுறித்து விசாரித்ததற்கு பணத்திற்காகவே இந்த திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் கல்யாணத்துக்கு தந்த ரூ.1.5 லட்சம் பணத்தை கேட்டனர்.
தலையில் விழுந்த இடி:அதற்கு வாணியும், அவரது அத்தையும், நாங்கள் பணத்தை தந்து விடுகிறோம். இன்றிரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என சொல்ல, மணமகன் குடும்பத்தினர் அத்தை வீட்டில் தங்கி உள்ளனர். மறுநாள் காலை பார்த்தபோது வாணியும் அத்தையும் அங்கிருந்து எஸ்கேப்பானது தெரிய வந்தது. இதனால் 4வது முறை அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் இச்சாவரம் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் இதுகுறித்த விசாரணையை நடத்தியபோதுதான், வாணிக்கு ஏற்கனவே 8 முறை திருமணம் நடந்தது விஷயம் அறிந்து 5வது முறை அதிர்ச்சி அடைந்துள்ளார் கணவர்..அதாவது இளைஞர்களை திருமணம் செய்து மோசடி செய்வத குறித்து ஏற்கனவே போலீசுக்கு ரகசிய தகவல்கள் சென்றுள்ளன.. எனவே வாணியை போலீசார் ஏற்கனவே வலைவீசி தேடி வருகிறார்களாம்.. இப்போது 9வதாக புகார் வரவும் மீண்டும் வாணியை தேடும் படலத்தில் போலீசார் இறங்கி உள்ளனர்.
பணம் தருபவர்களுக்கே முன்னுரிமை: வாணியை பொறுத்தவரை பெற்றோரை இழந்தவர்.. வாணி குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட்டனர். இதனால் அவரது தாய் வழி அத்தையான சந்தியா என்பவர் வாணியை வளர்த்து வந்திருக்கிறார். சிறுவயதிலேயே வாணியைத் தனது மோசடி வேலைகளுக்குச் சந்தியா பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வலைவீசி, அவர்களை திருமணமும் செய்து, அவர்களிடம் நகை, பணம், காஸ்ட்லி பொருட்களை சுருட்டிக்கொண்டு செல்வதை முழு நேர வேலையாக செய்து வந்திருக்கிறார்கள்.. இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் திருமண மோசடியை செய்திருக்கிறார்கள்.அதிலும் திருமணம் செய்ய தயாராக இருக்கும் இளைஞர்களையே வாணி டார்கெட் செய்து வந்துள்ளார்.. அதிலும் முன்கூட்டியே திருமண செலவுக்காகும் பணத்தை தருபவர்களுக்கே முன்னுரிமை தந்துள்ளார். அவர்களையே திருமணம் செய்து, அடுத்த சில நாளில், பணம், நகையுடன் தப்பிவிடுவாராம்..
18 வயதுக்கு கீழே மைனர் பொண்ணு: இப்போதைக்கு வாணியால் ஏமாற்றப்பட்ட 2 கணவர்கள் மட்டுமே புகார் தந்துள்ளனர்.. காரணம், வாணிக்கு இப்போதுதான் 19 வயதாகிறது.. இதற்கு முன்பு திருமணங்களை செய்தபோது, வாணி மைனராக இருந்தாராம்.. 18 வயதுக்கும் கீழுள்ள பெண்ணை திருமணம் செய்தது தெரிந்தால், போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்பதால் மற்ற இளைஞர்கள் போலீசுக்கு போகாமல் இருந்துள்ளனர்..எனவே வாணிக்கு 19 வயதுக்கு பிறகு நடந்த திருமணத்தால் பாதிக்கப்பட்ட 2 கணவர்கள் மட்டும் இச்சாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
வில்லங்கமாய் வந்த வில்சன்.. கணவனுக்கு காதலன் வைத்த 'பெல்ட்' விருந்து.. மேரி போட்ட ஸ்கெட்ச் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு











Click it and Unblock the Notifications