Union Budget 2026: மத்திய பட்ஜெட் 2026.. ரயில்களில் பயணிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கட் ஆன சலுகை மீண்டும் வருதா?
சென்னை: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்கள் ரயில் கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் கட்டண உயர்வு மூலம் கூடுதல் வருவாய் கிடைக்க இருப்பதால், அந்த சலுகை திரும்ப கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பயணிகள் நம்புகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். 2026-2027 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டை பொறுத்தவரை முதல் முறையாக இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது
முன்பு ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில்தான் ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாக கூடும். ரயில்வேயை பொறுத்தவரை உள்கட்டமைப்புகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல், தற்போது வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில் சேவைகளில் ரயில்வே துறை கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்காக கட்டண சலுகை கொரோனா காலக்கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. அதாவது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரயில்களில் 40% கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை
இந்த சலுகை தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதால், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவம், ஆன்மீகம் போன்ற காரணங்களுக்காக அடிக்கடி ரயில்களில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு இது பெரும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் ரயில் பயணிகள் மத்தியில் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களில் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த சலுகை நிறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா முடிந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி ரயில்வே வருவாய் முன்பைப் போல அதிகரித்துள்ளது.
நற்செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பு
இதனால் மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அந்த சலுகை மீண்டும் எப்போது கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டிலாவது அந்த நற்செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வேயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. 215 கிலோமீட்டருக்கு மேல் பயணங்களுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
சாதாரண ரயில்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாகவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான் - ஏசி மற்றும் ஏசி பிரிவுகளில் 2 பைசா கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், இதன் பயனாக மூத்த குடிமக்களுக்கு சலுகை மீண்டும் கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications