‛டான்ஜெட்கோ’ 2 ஆக பிரிப்பு.. தமிழ்நாடு மின்வாரியத்தின் புது பெயர்கள் இதுதான்.. மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள டான்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அந்த இரண்டு பிரிவுகள் என்னென்ன? அதன் பணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்து அதனை பகிர்ந்து வரும் பணியை டான்ஜெட்கோ (TANGEDCO) மேற்கொண்டு வருகிறது. இதன் முழு விரிவாக்கம் என்பது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாகும் (Tamil Nadu Generation and Distribution Corporation).

இந்நிலையில் தான் நிர்வாக காரணங்களாக டான்ஜெட்கோவை 2 ஆக பிரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி டான்ஜெட்கோ இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் இயங்கிய டான்ஜெட்கோ இனி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்று ஒரு பிரிவாகவம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்று இன்னொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது.
இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எிரபொருட்கள் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். அதேபோல் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்பது காற்று, சூரியஒளி, உயிரி எரிபொருள், கடல் அலை உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது.
இப்படி டான்ஜெட்கோவை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருந்தாலும் கூட முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதாவது நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ இரண்டாக பிரிக்கப்பட்டாலும் கூட மக்களுக்கான மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எந்த விட இடர்பாடுகளும் இருக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications