ஏடிஎம்-மில் இனி சில்லறையும் மாற்றலாம்.. வருகிறது 10 , 20, 50 ரூபாய் நோட்டுகள்.. குட்நியூஸ்
சென்னை: ஏடிஎம்களில் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் வருவது போல் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.500க்கு ஏடிஎம் இயந்திரத்தில் வைத்து சில்லறை பெற்று கொள்ளும் வசதியையும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை மும்பையில் நடந்து வரும் நிலையில் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
நம் நாட்டில் தற்போது யுபிஐ எனும் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் குறைந்த அளவிலான பணத்தை மட்டும் கையில் வைத்துள்ளனர். அனைவரும் யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் என்பது குறைந்துள்ளது. இதனால் திடீரென்று கடைகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கி கொண்டு பணம் கொடுத்தால் அவர்களுக்கு சில்லறை கொடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இதனால் ஹோட்டல், கடை வியாபாரிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகை்கு தீர்வு காண மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதாவது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் வழங்கும் வகையில் நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
இதற்கான சோதனை தற்போது மும்பையில் நடந்து வருகிறது. மும்பையில் பணப்புழக்கம் அதிகம் உள்ள லோக்கல் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுலகங்களில் இந்த இத்தகைய ஏடிஎம்கள் நிறுவி சோதிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை போல் 20 ரூபாய், 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வழங்கும் சோதனை மும்பை ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஏடிஎம்-யில் சில்லறை வழங்கப்படும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.500 நோட்டை வழங்கினால் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து சில்லறையை பெறும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக நன்மைகள் இருந்தாலும் சில முக்கிய சவால்களும் உள்ளன. அதாவது புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுவது வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அந்த மையங்களுக்கான இடம் தேர்வு, செக்யூரிட்டி நியமனம் உள்ளிட்டவற்றால் கூடுதல் நிதிச்சுவை ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் அச்சிடுதல் மற்றும் வங்கிகளில் புழக்கம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்அதனை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவது சவாலாக இருக்கும். இதனை சரிசெய்ய 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சடிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications