உடனே லிஸ்ட் அனுப்புங்க.. பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அனுப்பிய அவசர மெசேஜ்.. முக்கியம்
சென்னை; நாடு முழுக்க உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார் ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. முக்கியமாக மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கே ஆப்பு வைக்கும் அளவிற்கு கடுமையான எச்சரிக்கை மெசேஜ் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளதாம்.
அதன்படி ஒவ்வொரு அலுவலகங்களில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களில் திறமையற்ற ஊழியர்களை அடையாளம் காண வேண்டும். சரியாக பணி செய்யாத ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை மாற்ற வேண்டும். பயிற்சி மூலம் மாற்ற முடியாத பணியாளர்களை லிஸ்ட் எடுத்து அனுப்ப வேண்டும் என்று கடுமையான எச்சரிக்கை மெசேஜ் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளதாம்.

பணி இடத்தில் காலதாமதம் செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மையம் எச்சரித்துள்ளது. மேலும் வழக்கமாக தாமதமாக வருவதையும், அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே வெளியேறுவதையும் உயர் அதிகாரிகள், அலுவலக மேனேஜர்கள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை மேல் எச்சரிக்கை; ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை அமைப்பில் (AEBAS) பல ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யாமல் இருப்பதையும், சில ஊழியர்கள் தொடர்ந்து தாமதமாக வருவதையும் கவனித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை வழங்கும் மொபைல் ஃபோன் அடிப்படையிலான முக அங்கீகார அமைப்பைப் பயன்படுத்த பணியாளர் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும்.
எச்சரிக்கைகள் என்னென்ன?: இதில் நேரம் தவறாமை மட்டுமின்றி வேறு சில முக்கிய எச்சரிக்கைகளும் இடம்பிடித்துள்ளது.
அரசு துறையில் கொடுக்கப்பட்டுள்ள டிரெஸ் கோடில் வர வேண்டும்.
அடிக்கடி பர்மிஷன் போட கூடாது.
சில மணி நேர பரிமிஷன் பாதி நாள் விடுப்பாக கருத வேண்டும்.
நீண்ட பிரேக் எடுக்க கூடாது என்று விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
கடும் உத்தரவு: அனைத்து MDO களும் (அமைச்சகம்/துறை/அமைப்பு) வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வழக்கமாக தாமதமாக வருகை தருவது மற்றும் அலுவலகத்திற்கு முன்கூட்டியே வெளியேறுவது ஆகியவை தீவிரமாகப் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதைய விதிகளின் கீழ் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
அனைத்து மத்திய அரசு துறைகளின் ஊழியர்கள் தங்கள் வருகையை AEBAS எனப்படும் ஆதார் அடிப்படையிலான வருகை அட்டவணையை பயன்படுத்தி தவறாமல் குறிக்க வேண்டும். இதை மிஸ் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள MDO களின் அனைத்து HOD களும் தங்கள் ஊழியர்களுக்கு அலுவலக நேரம், தாமதமாக வருகை போன்ற விஷயங்களை சரியாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையை www.attendance.gov.in போர்ட்டலில் இருந்து தொடர்ந்து பதிவிறக்கம் செய்து, சரியான நேரத்திற்கு வர தவறியவர்களை அடையாளம் கண்டு ஆக்சன் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள விதிகளை மேற்கோள் காட்டி, தாமதமாக வருகை தரும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஒரு மணிநேரம் வரை தாமதமாக வருகை தர 2 நாள் மட்டுமே ஒரு மாதத்தில் அனுமதி தா வேண்டும், ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வந்தால் அதை அரை நாள் விடுப்பாக கணக்கில் கொள்ள வேண்டும்.
இதை விடுப்பாக கணக்கில் கொள்வது மட்டுமின்றி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக னைத்து MDO களும் (அமைச்சகம்/துறை/அமைப்பு) வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தாமதமாக வருவதைப் போலவே முன்கூட்டியே புறப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
முன்கூட்டியே வெளியேறும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications