சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழி வளர்ச்சிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அன்பகத்தில் அனல் பறக்கும் கேள்விகள்! திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்! அன்பகத்தில் அனல் பறக்கும் கேள்விகள்! திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்!

திமுகவுக்கு தோல்வி கிடையாது

திமுகவுக்கு தோல்வி கிடையாது

திமுகவுக்கு தேர்தல்களில் வெற்றி, தோல்வி வந்திருக்கலாம். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் தோல்வியே வந்ததில்லை. எப்போதும் வெற்றிதான். அந்த வெற்றி, எப்போதும் தொடரும். அதுதான் நமது சிறப்பு. அடுத்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில் திமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் வெற்றியை கொடுக்க போகிறார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கார்

உதயநிதி ஸ்டாலின் கார்

ஒருமுறை சட்டமன்றத்தில் நான் பேசும் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் என்று பேசினேன். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஆனால் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்போது சொன்னேன், இருவரும் தவறுதலாக எனது காரில் ஏற முற்பட்டீர்கள். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள்.

ஓபிஎஸ் சொன்ன பதில்

ஓபிஎஸ் சொன்ன பதில்

ஆனால் கமலாலயம் மட்டும் சென்றுவிட வேண்டாம் என்று கூறினேன். அப்போது எடப்பாடி பழனிசாமி வாயை திறக்கவே இல்லை. ஆனால் ஓபிஎஸ் எழுந்து, எங்களின் கார் எப்போதும் எம்ஜிஆர் நினைவை நோக்கியே செல்லும், அந்தப் பக்கம் போக மாட்டோம் என்று கூறினார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

கமலாலயத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்

கமலாலயத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள், என்ன சின்னத்தில் போட்டியிட போகிறார்கள் என்பது கூட தெரியாது. ஆனால் இருவரும் போட்டிப்போட்டிக் கொண்டு கமலாலய வாசலில் இருக்கிறார்கள். இதனை அனைவரும் புரிந்துகொண்டு அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

English summary
Minister Udhayanidhi Stalin has criticized that Rs.643 crores have been allocated for Sanskrit, which is spoken by only 24,000 people in the world. But only Rs.23 crores have been allocated for Tamil which is spoken by 8 crore people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X