ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் நீக்கம், ₹ மாற்றம்.. திமுக மீது .'பிரிவினைவாத' முத்திரை குத்தும் பாஜக
சென்னை: தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சி அமைந்த 2021-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு என அழைப்பதை "ஒன்றிய அரசு" என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது; இதேபோல ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என இடம் பெற்றிருந்தது நீக்கப்பட்டது பெரும் பிரளயத்தை உருவாக்கியது. தற்போது ₹ என்ற தேவநாகரி எழுத்து குறியீடு மாற்றப்பட்டு ரூ என்ற தமிழ் எழுத்து பயன்படுத்தப்படுவதும் தொடர்ச்சியாக பிரிவினைவாத விமர்சனங்களை திமுக எதிர்கொள்ள வைத்துள்ளது.
திமுக தொடங்கப்பட்டதே, தென்னிந்திய மாநிலங்களை- திராவிடர்கள் வாழும் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்த திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையுடன்தான். பின்னாளில் பேரறிஞர் அண்ணா, தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும், பிரிவினைக்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என அறிவித்தார்.

கருணாநிதியின் போர்க்குரல்
பேரறிஞர் அண்ணா மறைவுக்கு கருணாநிதி காலத்து திமுக, மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்தது; மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி; உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று முழங்கியதுடன் மாநில சுயாட்சி அதிகாரம் குறித்த ராஜமன்னார் குழு அமைத்ததும் திமுகதான். தமிழ்நாட்டுக்கான கொடியை 1975-ல் ஏற்றியவரும் கருணாநிதிதான். கருணாநிதிதான். 1991-ல் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் கூட, விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை துண்டாடுகிற பிரிவினைவாத அரசு என்ற குற்றச்சாட்டின் கீழ்தான்.
ஆனாலும் திமுகவோ, கருணாநிதியோ இம்மியளவும் மாநில சுயாட்சி முழக்கத்தில் இருந்து பின்வாங்கவும் இல்லை.. கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டுக்கு தனி கொடி உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருணாநிதியின் கோரிக்கை இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.
ஒன்றிய அரசு என உச்சரித்த ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்குப் பின்னர் 2021-ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதன் தொடக்கத்திலேயே மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என உச்சரித்தது பெரும் சர்ச்சையானது. அரசியல் சாசனப்படியே ஒன்றிய அரசுதான் என விளக்கம் தந்து இன்றளவும் அதை திமுக மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளையும் அப்படியே உச்சரிக்க வைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு.
ஜெய்ஹிந்த் நீக்கம்
அதேபோல ஜெய்ஹிந்த் என்ற சட்டசபையில் ஆளுநர் உரையின் இறுதியில் இடம் பெறக் கூடிய வாசகம் நீக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம்தான் இசைக்கப்பட வேண்டும்- தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல என்று இன்றைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பிடிவாதம் பிடிக்கிறார்; ஆனால் திமுக அரசோ, ஆளுநரையே வெளிநடப்பு செய்ய வைத்தது- தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியதன் மூலம்.
வரி தர முடியாது என அறிவிப்பு
தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழியைத் திணிக்கிறது; இந்தியை ஏற்க மறுத்தால் கல்விக்கான நிதி தர மறுக்கிறது; இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டு வரி வருவாயை மத்திய அரசுக்கு தர முடியாது என சொல்ல ஒரு நிமிடம் போதும் என எச்சரித்து பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
ரூபாய் இலச்சினை மாற்றம்
தற்போது அடுத்த கட்டமாக, இந்தி- சமஸ்கிருதத்தின் எழுத்து முறையான தேவநாகரியில் இருக்கக் கூடிய ₹ என்ற குறியீட்டுக்குப் பதிலாக ரூபாய் என்பதின் முதல் எழுத்தான ரூவையே ரூபாய்க்கான குறியீடாக பட்ஜெட்டில் பயன்படுத்துவோம் என அறிவித்துள்ளது தமிழ்நாட்டின் திமுக அரசு.
சீறிய நிர்மலா சீதாராமன்
இதற்கு இந்தியா முழுவதும் பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் உச்சமாக திமுக மீது வழக்கம் போல பிரிவினைவாத முத்திரையைக் குத்தி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.
'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் '₹' போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது என நீண்ட பதிவிட்டும் உள்ளார்.
காலந்தோறும் பிரிவினைவாத முத்திரை
காலந்தோறும் இத்தகைய மாநில உரிமைகள், தமிழ் மொழி உரிமைக்கான குரலை எழுப்பி பிரிவினைவாத முத்திரையை சுமப்பது திமுகவுக்கு வழக்கமானதுதான்.. புதியது அல்லவே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications