அப்போ இனி வாய்ப்பே இல்லை.. பழைய பென்ஷன் முறை வரவே வராது! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில், இனி பழைய பென்சன் முறை வர வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
ஒருங்கிணைந்த பென்ஷன் முறை வந்துள்ளதால், இனி பழைய பென்சன் முறை வர வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன் பயன்கள் சில தற்போது வந்துள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் முறையில் இருந்தாலும்.. பழைய பென்ஷன் முறை முழுமையாக இனி அமலுக்கு வராது.

பழைய பென்ஷன் முறை: புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இதை அரசு முதலீடு செய்யும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38- 42% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் கண்டிப்பாக அமலுக்கு வராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
யுபிஎஸ் திட்டம்: யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.
'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்’ உள்ள வித்தியாசம்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாக குறைந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு, அடிப்படை நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்சம் ₹10,000 மாத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications