சீனுக்குள் வந்த தமிழிசை.. தமிழக சிற்றுண்டி திட்டமே பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைதானாம்!
சென்னை: மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக கல்விப் புரட்சியில் புதிய அத்தியாயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிகளில் ஏற்கனவே மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1,14,95 மாணவர்களுக்கு ரூ33.56 கோடியில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்த முதல்வர்
மதுரை பள்ளிக்கூடத்தில் இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்களுக்கும் உணவு ஊட்டிவிட்டார். முதல்வரின் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் #TNBreakfast என்ற ஹேஷ்டேகுடன் டிரெண்டாகி வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் பார்வை
முதல்வரின் இத்திட்டத்தை வரலாற்று பார்வையுடன் அமைச்சர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தமிழக அமைச்சர் பொன்முடி, சா்.பிட்டி தியாகராயா் அவர்களால் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது 102 ஆண்டுகளுக்கு பிறகு அதே செப்டம்பா் மாதத்தில் காலை சிற்றுண்டி திட்டம் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது என திராவிடர் இயக்க வரலாற்று சாதனையாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கருத்து
இன்னொரு பக்கம், பாஜகவினர் இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். இது அதிமுக ஆட்சிக் காலத்திட்டம் என்று பல பாஜகவினர் பதிவிட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானா ஆளுந்நர் தமிழிசை சவுந்தரராஜன், இத்திட்டமே பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனின் ட்விட்டர் பதிவு: 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications