தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியும், துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நேற்று நியமித்துள்ளது. அதன்படி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியும், துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதன்படி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தமிழகம் வந்து கூட்டணி விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாகவும் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து உள்ளனர். அதே நேரத்தில் வருகிற 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நேற்று நியமித்துள்ளது. அதன்படி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியும், துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும், துணை பொறுப்பாளராக ராஜீவ் சந்திரசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அசாமிற்கும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேரளாவிற்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கேரள தேர்தல் துணை பொறுப்பாளராக கர்நாடக மாநில துணை முதல்வர் அஷ்வத் நாராயணனும், அசாம் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றியும் அந்தந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் பேச்சு நடத்துவார்கள். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நீடிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர். சமீபத்தில் மதுரை வந்த பாஜக தலைவர் ஜே.பி நட்டாவும் இதனை உறுதிபடுத்தி விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications