அண்ணாமலை, அண்ணாமலை அழுத்தி அழுத்தி அப்படி ராஜ்நாத் சிங் சொன்னதுமே.. அதிர்ந்து போன அரங்கம்
சென்னை: அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாமலை என்று பலமுறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரை பற்றி பாஜகவின் சாதனை விளக்கக்கூட்டத்தில் வெகுவாக பாராட்டி பேசினார்.
பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், "அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாமலை பற்றிய உங்களுக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். நான் பல வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். ஒருவரை பார்த்த உடன் என்னால் சொல்ல முடியும். அவர் உங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் தலைவர் இல்லை.. அவர் மொத்த இந்தியாவிற்குமான தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கட்டளையை செயல்படுத்தியும் வருகிறார். அவரது வேகத்தையும் செயல்முறையையும் பார்க்கும் போது, எவ்வளவு பாராட்டினாலும் தகும். சகோதார சகோதரிகளே ரொம்ப பொறுமையாக அமர்ந்து என்னுடைய உரையை கேட்டீர்கள்.. இத்தனைக்கும் நான் இந்தியில் பேசினேன். இருந்தாலும் பொறுமையாக கேட்டீர்கள். உங்களுக்கு தலைவணங்கி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்" என்றார்.
முன்னதாக ஊழல் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை கூறும் போது, அரசு மக்களுக்கு 50 ரூபாய் ஒதுக்கினால், வெறும் 15 ரூபாய் அளவிற்கு தான் மக்களுக்கு போகும் என்றும், மீது ஊழல் வாதிகளின் பைகளுக்கு போகிறது என்று வேதனைப்பட்டார். ஆனால் நம் பாரத பிரதமர் மக்களுக்கு ஒதுக்கும் பணம் அப்படியே உங்கள் கைகளுக்கு வருகிறது.
ஊழல் ஊழல்னு பேசிக்கொண்டிருந்தால் ஊழல் ஒழிந்து போய்விடாது, அதற்கான செயல்முறை, அதற்கான அணுகுமுறை சிறப்பாக இருக்க வேண்டும்.அந்த சிறப்பான செயலைத்தான் நமது பாரத பிரதமர் முன்னெடுத்துள்ளார். இன்று ஊழல் இல்லாமல் உங்கள் கைகளுக்கு பணம் கிடைக்கிறது.
நண்பர்களே நான் உங்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறேன். தமிழ்நாட்டில் இந்த ஆட்சி (திமுக ஆட்சி) எந்த அளவிற்கு ஊழல் செய்கிறது என்பது இந்தியா மொத்தமும் தெரியவருகிறது. அவ்வளவு மோசமான ஊழல் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் நான் கேட்கிறேன்.
ஒரே ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் இருக்கும் வாய்ப்பை தாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை எப்படி இருக்கும் என்பதை நிரூபித்து காட்டுகிறோம். அப்படி ஒருவர் ஊழல் செய்தால், அவர் பெயர் அரசு பட்டியலில் இருக்காது. அவர் பெயர் ஜெயிலில் தான் இருக்கும்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications