ஆட்சியை பிடிக்கும் திமுக - அதிமுக? இணைந்த திராவிட கட்சிகள்! டிரெண்டாகும் ‘லோகோ'.. விஜய்க்கு பிரஷர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான மெஜாரிட்டி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இல்லை. மேலும் விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரியும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் தான் திமுக - அதிமுக இணைந்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருவதோடு, 'ஒன்றிணைந்த திராவிட கட்சி' என்று லோகோ டிரெண்ட் ஆகி வருகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

united-dravidian-parties-a-logo-circulating-online-suggests-that-the-dmk-admk-are-joining-forces

தமிழகத்தில் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளார். இதில் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்நிலையில் தான் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 233 ஆக சரியும். அதன்படி மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் சப்போர்ட் தவெகவிற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தவெகவின் பலம் 112 ஆகஅதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது.

இந்நிலையில் முதலில் முதல்வராக பதவியேற்றுவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் நினைக்கிறார். அதன்படி இன்று அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய்யை தற்போது வரை ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைக்கவில்லை.

இதற்கிடையே தான் திடீரென்று இணையதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பரம எதிரிகளாக உள்ள திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.

திமுகவுக்கு 59 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுகவிற்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களை சேர்த்தால் மொத்தம் 106 எம்எல்ஏக்களாகும். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 4 எம்எல்ஏக்கள், அமமுக - பாஜகவிற்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 7 பேர் உள்ளனர்.

இவர்களை சேர்த்தால் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயரும். இதுதவிர திமுக கூட்டணியில் 2 கம்யூனிஸ்ட், விசிகவிடம் தலா 2 எம்எல்ஏக்கள் என்று தலா 6 எம்எல்ஏக்களும், தேமுதிகவிடம் ஒரு எம்எல்ஏவும், ஐயூஎம்எல் கட்சியிடம் 2 எம்எல்ஏக்களும் உள்ளன. இவர்களை சேர்த்தால் 121 எம்எல்ஏக்கள் வருவார்கள். இது மெஜாரிட்டிக்கு தேவையான 118 எம்எல்ஏக்களை விட அதிகம். இதன்மூலம் மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை பிடிக்க அதிமுக - திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் பலரும் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே தான், ''ஒன்றிணைந்த திராவிடக் கட்சி'' என்ற பெயரில் புதிய லோகோ ஒன்று இணையதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் திமுகவின் உதயசூரியன் சின்னம் மற்றும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இணைத்து 'ஒன்றிணைந்த திராவிடக் கட்சி'' என்றும், United Dravidian Party என்றும் எழுதப்பட்ட லோகோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது தவெகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+