கொன்றுவிடுவேன்.. மிரட்டிய நிகிதா.. மோசடி ராணி.. அஜித் குமார் கேஸ்.. வெளியான சீக்ரெட் தகவல்கள்!
சென்னை: இளைஞர் அஜித் குமார் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். இந்த நிகிதா மீது எதிர்பார்க்க முடியாத, கடுமையான மோசடி புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தலைமறைவும், கொலை மிரட்டலும்
நிகிதா, மோசடி செய்த பணத்துடன் தலைமறைவாவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். திருமங்கலத்தில் அவர் பிடிபட்டபோது, பணத்தைத் திரும்பக் கேட்டவர்களைக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. "கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கிறீர்களா? கொன்று விடுவேன்" என்று மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய புகார்கள்
நிகிதா மீது 2011ஆம் ஆண்டே திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது குடும்பத்தினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலப்பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டை, கல்லூரி நிர்வாக இயக்குனர் ஒருவரிடம் விற்பதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும், மற்றொரு நபரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நிலுவையில் உள்ளன.
திட்டமிட்ட திருட்டு நாடகமா?
இதுவரை நிகிதா சுமார் 65 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் அணிந்திருக்கும் நகைகள் கூட, மோசடி பணத்தில் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நகைகள் திருடு போய்விட்டதாகக் கூறி, அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்க நிகிதா திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரிய பின்புலம் இருக்குமா?
நிகிதாவுக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாமல், இத்தகைய மோசடிகளைச் செய்திருக்க முடியாது என்று பலரும் கருதுகின்றனர். இந்த மோசடிக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மொத்தத்தில், நிகிதாவின் மோசடி நடவடிக்கைகள் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதால், இந்த வழக்கு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் குமார் மரணத்திற்கு காரணமான நிகிதா
இந்த நிகிதாதான் அஜித் குமாரின் மரணத்திற்கு காரணம் ஆனார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே அஜித் குமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications