நிலம் உள்ளோருக்கு அறிவிப்பு.. அங்கீகாரம் இல்லாத மனை? ஜூன் 30க்குள் மாற்றலைனா? கடைசி சான்ஸ்: பெயிரா
சென்னை: அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத மனையை, ஜூன் 30க்கு முன்னே சட்டபூர்வமாக மாற்றிக் கொள்வது குறித்தும், ஆன்லைனில் மாற்றம் செய்யாவிட்டாவில், அதன்மூலம் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற விரிவான விளக்கத்தையும் தந்துள்ளது. பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, இந்த தகவலை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதி அல்லது அதற்கு முன்பு அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, அதற்கான விற்பனை பத்திரம் 2016 அக்டோபர் 20-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கடந்த 2017 நவம்பர் 3-ம் தேதி வரை 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு
இதற்கு பிறகு 2018 நவம்பர் 16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்குபிறகு பல்வேறு வகைகளில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. இதற்கு பிறகு 2024 பிப்ரவரி 29-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், நகர ஊரமைப்பு இயக்குநர், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அனைத்து விதிகளுக்குட்பட்டு எந்தவிதமான மாற்றமுமின்றி இணையவழி மூலம் விண்ணப்பித்து, இத்திட்டத்தில் அமையும் மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
வரன்முறைப்படுத்தல்
இந்த கருத்துருவை தமிழக அரசு கவனமாக பரிசீலித்து, வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, விதிகளுக்கு உட்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் 30வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.. இந்த திட்டத்தில் ஆன்லைனில் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் இதை எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்துதான், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு விளக்கத்தை தந்திருக்கிறது.. அதன் விவரம் இதுதான்:
அனுமதியில்லாத மனைகள்
"நீங்கள் வசிக்கும் மனை, அல்லது நீங்கள் விற்க திட்டமிட்ட மனை, DTCP / CMDA அனுமதியில்லாததா? அப்படி என்றால், இது கடைசி வாய்ப்பு! தமிழ்நாடு அரசு, 2016-ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதியில்லாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் ஆகியவற்றை சட்டபூர்வமாக வரன்முறை செய்ய ஜூன் 30, 2025 வரை காலநீட்டிப்பு வழங்கியுள்ளது.
மனை வாங்கிய பொதுமக்கள் - தற்போது அனுமதியில்லாத மனையில் வீடு கட்டியிருப்பவர்கள்
அபிவிருத்தியாளர்கள் - கடந்த ஆண்டுகளில் அனுமதி இல்லாமல் மனைகளைப் பிரித்து விற்றவர்கள் விரைவில் விற்க திட்டமிடுபவர்கள் - அங்கீகாரம் இல்லாத மனையைச் சட்டபூர்வமாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.
கால அவகாசம், விண்ணப்பம், இணையதளம்
இதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2026 வரை மட்டுமே உள்ளது.. www.tnlayoutreg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. 20.10.2016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்..
வரன்முறை செய்யாத மனைகளாக இருந்தால், இதன்மூலம் பல்வேறு இடர்பாடுகள், சிக்கல்கள் உருவாகலாம்.. குறிப்பாக, வீட்டு மின், தண்ணீர் இணைப்பு பெற முடியாது, வங்கிக் கடன்கள் மறுக்கப்படும், சொத்து விற்பனை செய்வதில் தடைகள், எதிர்காலத்தில் அரசால் கைப்பற்றப்படும் அபாயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டியவை:
1. உங்கள் மனையின் பதிவு தேதி மற்றும் பிரிவு விவரங்களை சரிபார்க்கவும்
2. மேற்கண்ட இணையதளத்தில் உங்கள் மனையை பதிவு செய்யவும்
3. தேவையான ஆவணங்களைத் தயார் செய்யவும்
4. சட்ட ஆலோசனை பெற்றால் சிறந்தது" என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு
(FAIRA) தெரிவித்திருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications